For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Coronavirus : நானும் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுருக்கேன்.. நெகிழ்ந்து மனம் உருகிய அண்டர்டேக்கர்!

ஆஸ்டின் : WWE அரங்கில் ரசிகர்களை, குறிப்பாக குழந்தைகளை தன் பார்வையாலேயே பயமுறுத்தி வைத்திருப்பவர் தான் அண்டர்டேக்கர்.

ஆனால், அவரும் நம்மைப் போல சாதாரண மனிதர் தான் என்பதை, குறிப்பாக அவரின் உதவும் உள்ளத்தை வெளிப்படுத்தி உள்ளது சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ.

கொரோனா வைரஸ் காரணமாக பசியில் வாடும் மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ள அவர் அதற்காக நிதி திரட்டும் முயற்சியாக அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாய்னா கடிக்கும்.. இது பாலைக் கவ்விப் பிடிக்குது.. என்னங்கடா நடக்குது இங்கேநாய்னா கடிக்கும்.. இது பாலைக் கவ்விப் பிடிக்குது.. என்னங்கடா நடக்குது இங்கே

அடித்து துவம்சம் செய்யும் அண்டர்டேக்கர்

அடித்து துவம்சம் செய்யும் அண்டர்டேக்கர்

WWE அரங்கில் அண்டர்டேக்கர் என்றாலே அள்ளு கிளம்பும். அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, இருட்டில், கருப்பு உடையில், சுமார் ஏழு அடி உருவம் ஒன்று மெதுவாக நகர்ந்து வரும். எதிரில் நிற்கும் வீரரை பதற வைத்து, அடித்து துவம்சம் செய்வார் அண்டர்டேக்கர்.

சாதாரண நபர் தான்

சாதாரண நபர் தான்

ஆனால், அவரும் சாதாரண மனிதர் தான் என சமூக வலைதளங்களின் வரவுக்கு பின் ரசிகர்கள் புரிந்து கொண்டனர். இதுதான் உண்மை என்றாலும் பலரும் அதை நம்ப மறுத்து அண்டர்டேக்கரை இன்னும் "டெர்ரர்" காட்டும் ரெஸ்லிங் வீரராகவே நினைத்துக் கொள்கிறார்கள்.

மக்களுக்கு உதவி

மக்களுக்கு உதவி

இந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு, பசியில் வாடும் மக்களுக்கு உதவ வேண்டி ஒரு சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆல் - இன் - சேலஞ்ச் என்ற அந்த சவாலை ஏற்றுக் கொண்ட அண்டர்டேக்கர் நிதி திரட்டி உதவ முன்வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் வீடியோ

இன்ஸ்டாகிராம் வீடியோ

தன்னுடன் அருகே அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் வாய்ப்பை வழங்கி அதன் மூலம் நிதி திரட்ட உள்ளார். அது பற்றி தன் இன்ஸ்டாகிராம் வீடியோவில் தன் வாழ்விலும் தான் சிரமப்பட்ட காலத்தை நினைவு கூர்ந்து, தான் உதவ உள்ளதாக கூறி உள்ளார்.

அடுத்த வேளை சாப்பாடு

அடுத்த வேளை சாப்பாடு

"நான் தான் அண்டர்டேக்கர். நான் ஆல் இன் சேலஞ்ச்சை ஏற்றுக் கொள்கிறேன். நான் ரெஸ்லிங் துறைக்குள் வந்த போது துவக்கத்தில் எனக்கு அடுத்த வேளை சாப்பாடு எங்கே இருந்து கிடைக்கும் என்றே தெரியாது. சில சமயம் என்னிடம் அந்த சாப்பாட்டுக்கான பணம் இருக்காது."

உதவ வேண்டும்

உதவ வேண்டும்

"எனவே, குறைந்த அளவில் இந்த மக்கள் என்ன கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். என்ன அனுபவிக்கப் போகிறார்கள் என்பது எனக்கு தெரியும். இந்த மக்களுக்கு உதவுவது நம் கையில் தான் உள்ளது. ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்."

இரவு உணவு மற்றும் பல

இரவு உணவு மற்றும் பல

"இந்த சவாலில் நானும் ஒரு பகுதி என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். நான் என்ன கொடுக்கப் போகிறேன் என்றால் அண்டர்டேக்கருடன் இரவு உணவு, நாம் ரெஸ்லிங் குறித்து அனைத்தும் பேசலாம்." என்று கூறிய அண்டர்டேக்கர், ஒரு சிறப்பு பரிசு பற்றியும் கூறினார்.

பிரத்யேக உடை

"மேலும், அந்த உணவுடன் நான் ரிங்கில், முக்கிய போட்டியில் பயன்படுத்திய உடை ஒன்றையும் அளிக்க உள்ளேன். அதுதான் உண்மையான டீல். அந்த உடைகள் தனித்துவமானது. எனக்காக தயாரிக்கப்பட்டது." எனக் கூறி இருக்கிறார் அண்டர்டேக்கர். இந்த வாய்ப்பை எப்படி பெறுவது என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதிக ஏலம்

அதிக ஏலம்

இதற்காக ஒரு இணையதளத்தில் ஏல முறையில் ரசிகர்கள் போட்டி போட்டு அண்டர்டேக்கருடன் உணவு உண்ணும் வாய்ப்பை வெல்லலாம். அதிக ஏலம் கோருவோர் வெற்றி பெற்று, அண்டர்டேக்கருடன் உணவு உண்ணும் வாய்ப்பை பெறுவார்கள்.

பல ஆயிரம் டாலர்

பல ஆயிரம் டாலர்

இதுவரை அந்த ஏலத்தில் 8,250 டாலர் வரை ஏலத் தொகை உயர்ந்துள்ளது. இந்த ஏலம் முடிய இன்னும் 8 நாட்கள் இருப்பதால் எப்படியும் இன்னும் பல ஆயிரம் டாலர்கள் வரை ஏலத் தொகை உயரும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகை ஏழைகளுக்கு உணவு வழங்கும் அமைப்புகளுக்கு செல்லும் என கூறப்பட்டுள்ளது.

Story first published: Thursday, April 16, 2020, 10:59 [IST]
Other articles published on Apr 16, 2020
English summary
WWE Undertaker accepts all in challenge to feed poor. He posted a video in Instagram and called people to bid to go with Undertaker for a dinner and also get his suit which he wore during a Wrestlemania match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X