For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமேல் வரமாட்டேன்.. விடைபெற்றார் அண்டர்டேக்கர்.. ஓய்வு அறிவிப்பு.. WWE ரசிகர்கள் உருக்கம்!

நியூயார்க் : 30 ஆண்டு காலம் WWE ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் முக்கிய வீரராக இருந்த அண்டர்டேக்கர் தன் ஓய்வை அறிவித்தார்.

Recommended Video

Undertaker announces retirement | அண்டர்டேக்கர்.. ஓய்வு அறிவிப்பு

"தி லாஸ்ட் ரைடு" என்ற தொடரில் தன் முக்கிய போட்டி அனுபவங்களை பகிர்ந்து வந்தார் அண்டர்டேக்கர்.

அந்த தொடரின் கடைசி பகுதியில் தான் இனி ரிங்கில் வந்து சண்டையிட ஆசையில்லை என கூறி தன் ஓய்வை அறிவித்தார்.

முன்னணி வீரர் டிமிட்ரோவ்வுக்கு கொரோனா உறுதி.. முன்னெச்சரிக்கை இன்றி நடந்த டென்னிஸ் தொடர்முன்னணி வீரர் டிமிட்ரோவ்வுக்கு கொரோனா உறுதி.. முன்னெச்சரிக்கை இன்றி நடந்த டென்னிஸ் தொடர்

அண்டர்டேக்கரின் ஓய்வு

அண்டர்டேக்கரின் ஓய்வு

அண்டர்டேக்கரின் ஓய்வு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது. ஒவ்வொரு ரெஸ்ஸில் மேனியா போட்டிக்கு பின்பும் அவர் ஓய்வு பெறுவார் என கூறப்படும். ஆனால், இடையே சில போட்டிகளிலும், ஆண்டு முடிவில் ரெஸ்ஸில்மேனியா போட்டியிலும் ஆடுவார் அண்டர்டேக்கர்.

ஓய்வு பற்றி பேச்சு

ஓய்வு பற்றி பேச்சு

ஆனால், கடந்த ஏப்ரல் நடைபெற்ற ரெஸ்ஸில்மேனியா 36 தொடர் முடிவில் அண்டர்டேக்கர் ஓய்வு பற்றி அதிகம் பேசப்பட்டது. காரணம், அந்த போட்டியில் அவர் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு விடை பெறுவது போன்ற காட்சி காட்டப்பட்டது.

கடைசி பயணம்

கடைசி பயணம்

அதைத் தொடர்ந்து அண்டர்டேக்கர் "தி லாஸ்ட் ரைடு" என தொடரில் தன் ரெஸ்லிங் அனுபவங்களை பேசி வந்தார். அந்த நிகழ்ச்சியின் பெயரின் அர்த்தம் "கடைசி பயணம்" என்பதாகும். அப்போதே ரசிகர்கள் அவர் விடை பெறப் போகிறார் என கணித்தார்கள். அது உண்மை ஆகி உள்ளது.

தீய சக்தி

தீய சக்தி

அண்டர்டேக்கர் கடந்த 1990 முதல் WWE ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கதாபாத்திரத்தை அளித்து பில்டப் கொடுப்பது WWE வழக்கம். அந்த வகையில் அண்டர்டேக்கர் தீய சக்தியாக காட்டப்பட்டார்.

உயிருடன் வந்தவர்

உயிருடன் வந்தவர்

அவர் இறந்த பின்னும் உயிருடன் வந்தவர் என பில்டப் கொடுத்தார்கள். 90களில் ஒரு போட்டியில் அவரை சில வீரர்கள் மண்ணுக்குள் புதைத்தனர். அடுத்த வாரம் அண்டர்டேக்கர் உயிருடன் வந்த போது சிறுவர்கள் அதைக் கண்டு பீதி அடைந்தனர்.

டெட்மேன்

டெட்மேன்

அப்போது முதல் "டெட்மேன்" (இறந்த மனிதன்) என அழைக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட அண்டர்டேக்கர் என்பதன் அர்த்தம், பிணங்களை அடக்கம் செய்பவர் என்பதாகும். இப்படி தீயவராக காட்டப்பட்ட அண்டர்டேக்கருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

குறைவான போட்டிகள்

குறைவான போட்டிகள்

அண்டர்டேக்கரை வீழ்த்தவே முடியாது என்ற கருத்தும் அப்போது இருந்தது. அவரது மோதலும் விறுவிறுப்பாக இருக்கும். சுமார் 20 ஆண்டுகள் தீவிரமாக ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்று வந்த கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் குறைவான போட்டிகளிலேயே பங்கேற்றார்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

அவருக்கு தற்போது 55 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரெஸ்ஸில்மேனியா 36 தொடரில் தன் கடைசி போட்டியில் சிறந்த ரெஸ்லிங் வீரர்களில் ஒருவரான ஏஜே ஸ்டைல்ஸ் உடன் மோதினார். சினிமா பாணியில் அந்த போட்டி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

சிறந்த முடிவு

சிறந்த முடிவு

அதன் முடிவில் அண்டர்டேக்கர் ஸ்டைல்ஸை வீழ்த்திய பின் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு விடை பெறுவது போன்ற காட்சி இடம் பெற்றது. அதுவே அண்டர்டேக்கரின் கடைசிப் போட்டி. அது பற்றி பேசிய அண்டர்டேக்கர், ‘அது என் கேரியரின் சிறந்த முடிவு" என குறிப்பிட்டார்.

30 ஆண்டுக் காலம்

30 ஆண்டுக் காலம்

அண்டர்டேக்கர் தன் ஓய்வை அறிவித்த நிலையில், WWE நிறுவனம், சக வீரர்கள், ரசிகர்கள் பெரும் அளவில் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். 30 ஆண்டுக் காலம் நம்மை மகிழ்வித்த வீரர் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Monday, June 22, 2020, 12:42 [IST]
Other articles published on Jun 22, 2020
English summary
WWE Undertaker announces retirement. He also called his last match as a perfect ending
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X