For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வந்துருச்சுன்னு சொல்லிட்டு 2 நாளா இதைத் தான் பண்ணீங்களா? WWE-இன் டகால்டி வேலை.. கசிந்த தகவல்!

நியூயார்க் : WWE ரெஸ்லிங் போட்டிகள் என்றாலே ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகள் என்பது பலரும் அறிந்தது தான்.

Recommended Video

எல்லாம் பொய் சார்... WWE -ன் டகால்டி வேலை

ஆனால், பெரும்பாலும் போட்டியின் முடிவு மற்றும் முக்கிய தருணங்களை மட்டுமே அவர்கள் திட்டமிட்டு வந்தனர்.

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் ஒன்று கூட முடியாது என்பதால் WWE தன் போட்டிகளை ரசிகர்கள் இல்லாத காலி அரங்கில் நடத்தி வருகிறது.

ரசிகர்கள் இல்லாத அரங்கு

ரசிகர்கள் இல்லாத அரங்கு

கடந்த சில வாரங்களாக தன் வாராந்திர நிகழ்ச்சிகளான மன்டே நைட் ரா மற்றும் பிரைடே நைட் ஸ்மேக்டவுன் ஆகியவற்றை ரசிகர்கள் இல்லாத அரங்கில் நடத்திய WWE, தொடர்ந்து ரெஸ்ஸில்மேனியா 36 சிறப்பு நிகழ்ச்சியையும் அதே போல நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

ரெஸ்ஸில்மேனியா நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் துவக்கத்தில் நடத்தப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 5 அன்று அந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ரசிகர்களுக்கு மத்தியில் நடக்க இருந்த அந்தப் போட்டிக்கு அமெரிக்க அரசு கட்டுப்பாடு விதித்தது.

ஸ்டுடியோவில் போட்டிகள்

ஸ்டுடியோவில் போட்டிகள்

அதையடுத்து ரசிகர்கள் இல்லாத அரங்கில், தன் சொந்த ஸ்டுடியோவில் போட்டிகளை நடத்த திட்டமிட்டது WWE. ஏப்ரல் 5 அன்று இந்த தொடர் நேரலையில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்பே போட்டிகளை பதிவு செய்து அதை ஏப்ரல் 5 அன்று ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது.

வீடியோ பதிவு செய்தது

வீடியோ பதிவு செய்தது

அதன்படி கடந்த புதன் மற்றும் வியாழன் அன்று இரு தினங்களில் ரெஸ்ஸில்மேனியா போட்டிகளை நிறுத்தி நிதானமாக வீடியோ பதிவு செய்துள்ளது WWE. அதில் தான் சில டகால்டி வேலைகளை செய்துள்ளது. அது பற்றிய தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வழக்கமான செயல்பாடு

வழக்கமான செயல்பாடு

எப்போதும் போட்டிகளை ரசிகர்கள் முன் நடத்தினாலோ, நேரலையில் ஒளிபரப்பினாலோ WWE-ஆல் போட்டியின் நகர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்த முடியாது. பெரும்பாலும் முடிவுகள் மட்டுமே முன்பே முடிவு செய்யப்படும்.

நேரலை இல்லை

நேரலை இல்லை

அதன்படி வீரர்கள் தங்களுக்குள் சில குறியீடுகள் மூலம் அடுத்து என்ன செய்வது என தெரிவித்துக் கொண்டு போட்டியை எடுத்துச் செல்வார்கள். ஆனால், இப்போது நேரலையும் இல்லை. ரசிகர்களும் இல்லை. இதை பயன்படுத்தி WWE புகுந்து விளையாடி உள்ளது என்கிறார்கள்.

நீளம் குறையும்

நீளம் குறையும்

அதாவது, ஒவ்வொரு போட்டியையும் தங்கள் இஷ்டம் போல நீண்ட நேரத்திற்கு பதிவு செய்துள்ளார்கள். ஆனால், போட்டியை ரசிகர்கள் பார்க்கும் போது அதன் நீளம் குறைக்கப்பட்டு இருக்கும். போட்டியை சுவாரஸ்யமாக்க இப்படி செய்துள்ளது WWE.

எடிட்டிங்

எடிட்டிங்

நீண்ட நேர போட்டிகளில் சிறந்த தருணங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை எடிட் செய்து வெட்டி விடப் போகிறார்கள். இது ஒருபுறம் என்றால், இதையும் தாண்டி சினிமா போல ஒரு வேலையும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வேறு முடிவுகள்

வேறு முடிவுகள்

ஒவ்வொரு போட்டிக்கும் வேறு, வேறு முடிவுகளை எடுத்து வைத்துக் கொண்டு எடிட்டிங்கில் எது சிறப்பாக இருக்கிறது என பார்த்து அதை பயன்படுத்த இருப்பது தான் அந்த தகவல். இது உண்மையா என தெரியவில்லை. ஆனால், நிச்சயம் எடிட்டிங் இருக்கும் என்பது மட்டும் உண்மை.

கப்சா விட்டு வரும் WWE

கப்சா விட்டு வரும் WWE

சுமார் 10 நாட்கள் கழித்து ஒளிபரப்பாக உள்ளது ரெஸ்ஸில்மேனியா 36. இதன் இடையே போட்டிகளின் முடிவுகள் குறித்து வேறு யாரும் வெளியே தகவல்களை கசிய விடும் முன் தாங்களே கப்சா விட்டு சில தவறான தகவல்களை கசிய விட்டு வருகிறது WWE.

Story first published: Sunday, March 29, 2020, 11:52 [IST]
Other articles published on Mar 29, 2020
English summary
WWE Wrestlemania 36 tapped and you may see edited matches, as there is no live stream.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X