இது தங்கம் நம்பர் 3...! உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் அசத்தும் இந்தியா..! குவியும் வாழ்த்துகள்

ரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினி தேஸ்வால் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் போட்டி நடைபெற்றது. போட்டியில், இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினி தேஸ்வால் தங்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் 9வது வீராங்கனை எனும் பெருமையை யாஷ்அஸ்வினி பெற்றுள்ளார். ஏற்கெனவே தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதித்துள்ள நிலையில் இப்போது அதே 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அஸ்வின் தங்கம் வென்றுள்ளார்.

என் குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்க முடியுமா...? பிரபல கிரிக்கெட் வீரரிடம் காதல் சொன்ன பிரபல நடிகை

இந்தியாவுக்கு தங்கம்

இந்தியாவுக்கு தங்கம்

22 வயதான முன்னாள் ஜூனியர் உலக கோப்பை சாம்பியனான அஸ்வினி 236.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவரும் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கோஸ்டெவ்ச் 234.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வெண்கல பதக்கம்

வெண்கல பதக்கம்

செர்பியாவின் ஜாஸ்மினா மிலாவோனோவிக் 215.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கோஸ்டெப் யெச்சை 1.9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை அஸ்வினி கைப்பற்றியுள்ளார்.

9 பேர் தகுதி

9 பேர் தகுதி

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை துப்பாக்கி சூடுதலில் 9 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டிலா, சவுரவ் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சம்போத், மனு பாகேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

3வது தங்கப்பதக்கம்

3வது தங்கப்பதக்கம்

ரியோ டி ஜெனிராவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இந்தியா பெறும் 3வது தங்கம் இதுவாகும். முன்னதாக அபிஷேக் வர்மா, இளவேனில் வாலறிவன் தங்கம் வென்ற நிலையில் இப்போது அஸ்வின் வென்றுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Yashaswini deswal from india wins gold medal at issf rifle pistol world cup.
Story first published: Sunday, September 1, 2019, 19:27 [IST]
Other articles published on Sep 1, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X