For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018-ஐ உலகளவில் உலுக்கிய 3 விளையாட்டு வீரர்கள்.. அப்படி என்ன தான் செஞ்சாங்க?

டெல்லி: 2௦18இல் கிரிக்கெட்டில் எராளமான சர்ச்சைகள் நடைபெற்றன. அதைப் பற்றி நாம் நிறைய பார்த்தாகி விட்டது.

ஆனால், உலகளவில் வெடித்த சில விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் சர்ச்சைகள் இந்த ஆண்டை கலக்கின. ரொனால்டோ மீதான பாலியல் குற்றச்சாட்டு, செரீனா வில்லியம்ஸ்-இன் விம்பிள்டன் இறுதிப் போட்டி சர்ச்சை, நைக் விளம்பர சர்ச்சை என சில முக்கிய சர்ச்சைகள் பற்றி பார்க்கலாம்.

கோலின் கேப்பர்னிக் சர்ச்சை

கோலின் கேப்பர்னிக் சர்ச்சை

அமெரிக்காவில் இனவெறியை எதிர்த்து ஒரு புதிய போராட்ட முறையை தொடங்கி வைத்தார் பிரபல NFL வீரர் கோலின் கேப்பர்னிக். போட்டிக்கு முன் அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கும் போது முட்டி போட்டு அதற்கு அமைதி முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் அந்த போராட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுவாக உள்ளது.

நைக் எதிர்ப்பு

நைக் எதிர்ப்பு

அவரை பயன்படுத்தி நைக் விளம்பரம் செய்ததை கண்ட எதிர்ப்பாளர்கள், நைக் பொருட்களை புறக்கணிக்க வேண்டி தனி போராட்டத்தை துவங்கினர். பலர் நைக் பொருட்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ரொனால்டோ சர்ச்சை

ரொனால்டோ சர்ச்சை

ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவெண்டஸ் அணிக்கு தாவினார் ரொனால்டோ. ஆனால், கூடவே அமெரிக்காவில் இருந்து ஒரு வழக்கையும் கொண்டு வந்தார். லாஸ் வேகாஸ் நகரில் ஒரு பாரில் மாடல் அழகி ஒருவரை பாலியல் ரீதியில் அணுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான வழக்கு இன்னும் நடந்து வருகிறது.

செரீனா வில்லியம்ஸ் சர்ச்சை

செரீனா வில்லியம்ஸ் சர்ச்சை

மகளிர் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் - நவோமி ஒசாகா மோதினர். இந்த போட்டியில் நடுவர் செரீனாவை எச்சரித்தார். அதை விரும்பாத செரீனா கோபமடைய, அதற்கும் நடுவர் பெனால்டி புள்ளிகள் கொடுக்க, செரீனா எரிமலையாக சீறி அந்த இறுதிப் போட்டியை ஒரு நாடகம் போல மாற்றினார். ஜப்பானின் நவோமி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கூட மறைத்து விட்டது செரீனாவின் செயல்.

Story first published: Saturday, December 29, 2018, 19:16 [IST]
Other articles published on Dec 29, 2018
English summary
Year ender 2018 - Big controversies in the world of Sports in 2018
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X