For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவர்கள் பெயர் நோம்புமெலியோ மாதே.. இன்னொருவரது பெயர் நோன்டுமிசோ சாங்சே.. சாதனைப் பெண்கள்

டர்பன்: இது வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் தருணம். தென்னாப்பிரிக்காவின் அரும்பெரும் தலைவரான நெல்சன் மண்டேலாவுடன் தொடர்புடைய இடத்திலிருந்து இரு இளம் வீராங்கனைகள் சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய தலைவர் நெல்சன் மண்டேலா. அவரைப் போல தியாகம் செய்த ஒரு தலைவரை இப்போது கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. நம்ம ஊர் மகாத்மா காந்தியை தனது தலைவராக வரித்துக் கொண்டு அகிம்சை வழியில் தனது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர் நெல்சன் மண்டேலா.

நெல்சன் மண்டேலா பல வருடங்கள் தனிமைச் சிறையில் வாடியவர். அவரை சுட்டிக் காட்டித்தான், அவரே அத்தனை வருடம் தனிமையில் வாழ்ந்து தியாகம் செய்துள்ளார், 21 நாட்கள் லாக்டவுனுக்கு முணுமுணுக்கும் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று பலரும் சுட்டிக் காட்டினர்.

தலைகீழாத்தான் குதிப்பேன்.... ஏம்மா இப்படித்தான் சட்டை போடுவீங்களா.. ஆனா நல்லாருக்கு!தலைகீழாத்தான் குதிப்பேன்.... ஏம்மா இப்படித்தான் சட்டை போடுவீங்களா.. ஆனா நல்லாருக்கு!

மண்டேலாவுடன் தொடர்புடைய பூமி

மண்டேலாவுடன் தொடர்புடைய பூமி

இப்போது நெல்சன் மண்டேலாவின் பெருமை மிக்க பூமியிலிருந்து கிளம்பியுள்ள இரண்டு இளம் விளையாட் டு வீராங்கனைகள் குறித்துத்தான் பார்க்கப் போகிறோம். ஒருவரது பெயர் நோம்புமெலியோ மாதே.. இன்னொருவரது பெயர் நோன்டுமிசோ சாங்சே. இருவரும் டர்பன் அருகே உள்ள இனான்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.

முதல் வாக்குச்சாவடி

இந்தப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில்தான் நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்கவின் ஜனநாயக தேர்தலில் வாக்களித்தார். அந்த வகையில் இப்பகுதியானது தென்னாப்பிரிக்க வரலாற்றில் மிகவும் பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியில் இருந்து தற்போது விளையாட்டு உலகுக்கு வந்துள்ளதால் இந்த இரண்டு இளம் வீராங்கனைகளும் கவனிப்புக்குரியவர்களாக மாறியுள்ளனர்.

இளம் ரக்பி வீராங்கனை

நொம்புமெலியோ ரக்பி வீராங்கனை ஆவார். அதேபோல நோன்டுமிசோ கிரிக்கெட் வீராங்கனை ஆவார். இருவருமே கடந்த ஆண்டுதான் சர்வதேச அளவில் விளையாட ஆரம்பித்துள்ளனர். தற்போது தென்னாப்பிரிக்காவிலும் கொரோனாவைரஸ் காரணமாக லாக்டவுன் அமலில் உள்ளது. எனவே விளையாட முடியாமல் இருவரும் வீட்டுக்குள்ளேய முடங்கியுள்ளனர். ஆனால் வரலாறு முடங்கிப் போகாது இல்லையா..!

கிரிக்கெட் கால்பந்து

கிரிக்கெட் கால்பந்து

தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை கால்பந்து, கிரிக்கெட், ரக்பி உள்ளிட்ட விளையாட்டுக்கள் மிகப் பிரபலம். அங்கும் கொரோனாவைரஸ் காரணமாக எந்தப் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளது. அனைவருமே லாக்டவுனைக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆப்பிரிக்கக் கண்டம்தான் அடுத்து பெரிய ஹாட் ஸ்பாட்டாகப் போகிறது என்பதால் தென்னாப்பிரிக்கர்களும் கூட பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

Story first published: Sunday, April 19, 2020, 12:14 [IST]
Other articles published on Apr 19, 2020
English summary
Sportswomen Nompumelelo Mathe and Nondumiso Shangase hail from Inanda, Durban which related with Nelson Mandela
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X