அடுத்த ஷாக்.. நோவாக் ஜோக்கோவிக்குக்கு கொரோனா.. அதிர்ச்சியில் டென்னிஸ் உலகம்

பெல்கிரேட்: பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிக்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் டென்னிஸ் உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் Novak Djokovic கொரோனாவால் பாதிப்பு

விளையாட்டு உலகினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. பல கிரிக்கெட் வீரர்கள், கால்பந்து வீரர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பிரபல டென்னிஸ் ஸ்டார் ஜோகோவிக்கையும் கொரோனா தாக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

திங்கள்கிழமைதான் குரோஷியாவில் நடந்த அட்ரியா டூர் போட்டித் தொடரிலிருந்து பெல்கிரேட் திரும்பியிருந்தார் ஜோகோவிக். வந்தவருக்கு டெஸ்ட் எடுத்துப் பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. அவரைப் போலவே மேலும் 2 வீரர்களுக்கும் டெஸ்ட் பாசிட்டிவ் என வந்துள்ளது.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிக்தான் இந்த அட்ரியா டூரையே ஏற்பாடு செய்திருந்தார். செர்பியா மற்றும் குரோஷியா நாடுகள் இணைந்து இந்த காட்சித் தொடரை நடத்தின. செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிக்குடன் அவரது மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது குழந்தைகளுக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. முடிவு இன்னும் வரவில்லை.

என்னங்க இது.. 25 வயசுதான்.. மலேரியாவுக்கு வீழ்ந்த டோகோ கால்பந்து வீரர்

இந்த கண்காட்சிப் போட்டிக்கு ஜோகோவிக் ஏற்பாடு செய்தபோது ஜோகோவிக் விமர்சனத்துக்குள்ளானார். இது அபாயகரமானது, ரிஸ்க் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அதை ஜோகோவிக் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது ஜோகோவிக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்ற வீரர்கள் யாருமே சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 14 நாள் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் ஜோகோவிக்கும் அவரது மனைவியும்.. இந்த நிலையில்இந்த டென்னிஸ் தொடரால் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார் ஜோகோவிக்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
World number one Tennis star Novak Djokovic has been tested positive for Coronavirus
Story first published: Tuesday, June 23, 2020, 18:40 [IST]
Other articles published on Jun 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X