குவாங்ஷு: ஆசியவிளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று 4வது தங்கப் பதக்கத்தை வென்றது.மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில், இந்தியாவின் ப்ரீஜா ஸ்ரீதரன் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.இந்தியாவின் கவிதா ராவத் 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.ப்ரீஜா 31:50:47 என்ற கணக்கில் முதலிடத்தைப் பிடித்தார். கவிதா ராவத் 31:51.44 என்ற கணக்கில் போட்டி தூரத்தைக் கடந்தார்.சானியாவுக்கு வெண்கலம்மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் பெற்றார்.இந்தியா இதுவரை 4 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் 32 பதக்கங்களை வென்றுள்ளது.