For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 ஆஸி. ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற கிரிக்கெட் வீராங்கனை..!! 44 ஆண்டுகால கனவு நிறைவேற்றம்..!!

மெல்போர்ன்: 2022ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

இதில் 42 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி வென்றார்.

இறுதிப் போட்டியில் 27வது நிலை வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த காலின்சுடன் ஆஷ்லி பார்டி மோதினார்.

IPL-ல் அயல்நாட்டுக்கு மவுசு.. 5 தொடக்க வீரர்களுக்காக கொட்டும் பண மழை.. அப்படி என்ன ஸ்பெஷல்..!!IPL-ல் அயல்நாட்டுக்கு மவுசு.. 5 தொடக்க வீரர்களுக்காக கொட்டும் பண மழை.. அப்படி என்ன ஸ்பெஷல்..!!

கிரிக்கெட் வீராங்கனை

கிரிக்கெட் வீராங்கனை

அதற்கு முன், ஆஷ்லி பார்டி ஒரு கிரிக்கெட் வீராங்கனை என்று இங்கு குறிப்பிடுவது கூடுதல் சிறப்பு. டென்னிஸ் விளையாடிய போதே கிரிக்கெட் மீது ஆர்வம் வந்துள்ள பார்டி, டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று கடந்த 2014ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு திரும்பினார். கடும் பயிற்சி செய்த பார்டி. பிக் பேஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடினார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே 27 பந்துகளுக்கு 39 ரன்கள் குவித்தார்.

மீண்டும் டென்னிஸ்

மீண்டும் டென்னிஸ்

இந்த நிலையில் தான் 2016ஆம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் களத்திற்கு பார்டி திரும்பினார். ஆனால் அவர் உச்சம் தொட்டது 2019ஆம் ஆண்டு தான். பிரஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்டாம் பட்டத்தை வென்ற அவர், கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்று அசத்தினார். தற்போது 3வது முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிச் சுற்றுக்கு பார்டி தகுதி பெற்றார். இந்த தொடரில் அவர் ஒரு செட்டை கூட இழக்கவில்லை.

சாம்பியன்

சாம்பியன்

தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய ஆஷ்லி பார்டி, முதல் செட்டை 6க்கு3 என்று எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டில் காலின்சும் அதிரடி காட்ட , ஆட்டத்தில் அனல் பறந்தது. இருவரும் 6க்கு6 என்ற கேம்மில் நிற்க, டை பிரேக் முறையில் ஆஷ்லி பார்டி 2வது செட்டை தனதாக்கினார். சுமார் ஒரு மணி நேரம் 27 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் ஆஷ்லி பார்டி 6க்கு3, 7க்கு6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

21 கோடி பரிசு

21 கோடி பரிசு

இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 44 ஆண்டுகளுக்கு பிறகு வென்ற முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். ஓட்டுமொத்தமாக இது அவருக்கு 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். ஆஷ்லி பார்டிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 21 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

44 ஆண்டு கனவு

44 ஆண்டு கனவு

சொந்த நாட்டு மக்கள் முன் விளையாடி வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக ஆஷ்லி பார்டி தெரிவித்தார். உங்களால் தான் இது சாத்தியமாயிற்று என்று குறிப்பிட்ட பார்டி, கனவு மெய்ப்பட்டு விட்டதாக கூறினார். நடப்பாண்டில் தொடர்ந்து 11 போட்டிகளில் ஆஷ்லி வென்றுள்ளார். இந்த 44 ஆண்டுகளில் 4 ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் இறுதிப் போட்டி வரை வந்து தோற்க, ஆஷ்லி ஆஸ்திரேலிய மக்களின் கனவை நிறைவேற்றினார்.

Story first published: Saturday, January 29, 2022, 21:15 [IST]
Other articles published on Jan 29, 2022
English summary
Australia open 2022 Ashleigh Barty Won the women singles title 2022 ஆஸி. ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற கிரிக்கெட் வீராங்கனை..!! 44 ஆண்டுகால கனவு நிறைவேற்றம்..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X