For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜோகோவிச்சை நாடு கடத்த வேண்டும்.. ஒரு விளையாட்டுக்காக பொய் சொல்லிட்டாரு.. வார்னே பாய்ச்சல்..!!

மெல்போர்ன்: ஒரு புறாவுக்காக அக்கப்போரா என்பது போல் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் கதை சென்று கொண்டு இருக்கிறது.

Recommended Video

Djokovic Wins Court Battle, Cleared To Play Australian Open | OneIndia Tamil

ஆனால் இது அனைத்துக்கும் காரணம், அவருடைய தனிப்பட்ட முடிவு தான். தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டு உடைய ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட வந்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான், இங்கு விளையாட முடியும்.ஆனால் தாம் மருத்துவ ரீதியாக விதி விலக்கை பெற்றுள்ளதாக ஜோகோவிச் கூறி இருந்தார்

“6 விக்கெட்கள்.. 5 டக் அவுட்கள்” டி20ல் ரஷிக் கான் ஆடிய ருத்ர தாண்டவம்.. ஐபிஎல்-ல் எகிறிய மவுசு!! “6 விக்கெட்கள்.. 5 டக் அவுட்கள்” டி20ல் ரஷிக் கான் ஆடிய ருத்ர தாண்டவம்.. ஐபிஎல்-ல் எகிறிய மவுசு!!

ஜோகோவிச்சின் பொய்

ஜோகோவிச்சின் பொய்

இது ஆஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜோகோவிச் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு, அவரை நட்சத்திர ஹோட்டலில் வைத்திருந்தது. இதனையடுத்து, விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஜோகோவிச் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், தமக்கு டிசம்பர் மாதம் தான் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், ஆனால் தடுப்பூசி செலுத்தவில்லை என்று ஜோகோவிச் அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார்

பரபரப்பு புகார்

பரபரப்பு புகார்

இந்த நிலையில், ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறிய காலக் கட்டத்தில் அவர் மாஸ்க் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்கான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகள் எழுந்தன.. இந்த நிலையில், டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை கண்டித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னே சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்,

வார்னே கண்டனம்

வார்னே கண்டனம்

அதில், ஜோகோவிச் ஒரு சிறந்த டென்னிஸ் வீரர், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவர் பொய் சொல்லிவிட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட காலத்தில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாஸ்க் இல்லாமல் கலந்து கொண்டார், இதற்காகவே ஜோகோவிச் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். ஜோகோவிச்சு தடுப்பூசி செலுத்தி கொள்ள உரிமை இருந்தால், அவரை நாடு கடுத்த ஆஸ்திரேலியாவுக்கும் உரிமை உள்ளது என்று வார்னே கூறியுள்ளார்.

அட்டவணை தயார்

அட்டவணை தயார்

இந்த நிலையில் ஜோகோவிச்சுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகளின் அட்டவணை தயாராகிவிட்டது. ஆனால், அவரது விசா நடைமுறை பிரச்சினை இன்னும் முடியவில்லை. இதனால் அவருக்கு தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளிக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, January 14, 2022, 13:33 [IST]
Other articles published on Jan 14, 2022
English summary
Australia open 2022 – Australian Legend Shane Warne slams Djokovic for his liesஜோகோவிச்சை நாடு கடத்த வேண்டும்.. ஒரு விளையாட்டுக்காக பொய் சொல்லிட்டாரு.. வார்னே பாய்ச்சல்..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X