For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸி. ஓபன் டென்னிஸ்- உலக சாதனை படைப்பாரா நடால்! அதிர்ச்சி வைத்தியம் அளிக்க காத்திருக்கும் ரஷ்ய வீரர்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது அதன் கிளைமாக்சை எட்டியுள்ளது. சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்று ஞாயிற்றுகிழமை தெரிந்துவிடும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் நடாலும், உலகின் 2ஆம் நிலை வீரரான மேட்வடெவ்வும் மோதுகின்றனர்.. இந்திய நேரப்படி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்தப் போட்டி டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் நடால் படைக்க இருக்கும் சாதனை தான்.

2022 ஆஸி. ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற கிரிக்கெட் வீராங்கனை..!! 44 ஆண்டுகால கனவு நிறைவேற்றம்..!!2022 ஆஸி. ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற கிரிக்கெட் வீராங்கனை..!! 44 ஆண்டுகால கனவு நிறைவேற்றம்..!!

உலக சாதனை

உலக சாதனை

டென்னிஸ் உலகின் மூவேந்தர்களான ரோஜர் ஃபெடரர், நடால் மற்றும் ஜோகோவிச் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் தற்போது 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். தற்போது நடால் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றால் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.

அதிர்ச்சி வைத்தியம்

அதிர்ச்சி வைத்தியம்

ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஏற்கனவே இந்த சாதனையை படைக்க இருந்த ஜோகோவிச்சை, கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் தடுத்து நிறுத்தினார் ரஷ்ய வீரர் மேட்வடெவ். தற்போது நடாலுக்கும் சவால் அளிக்கும் விதமாக இருக்கிறார் மேட்வடெவ். மேட்வடெவ் நடாலை விட 10 வயது இளமையானவர், நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள மேட்வடெவ், நடால் தான் சாதனையை நெருங்கியுள்ளார். இதனை வென்றால் அவருக்கு 21வது பட்டம் . எனக்கு இது வெறும் 2 தான். இதனால் நடாலுக்கு மிகப் பெரிய அழுத்தம் ஏற்பட்டு இருக்கும். ஜோகோவிச்சுக்கும் அதே அழுத்தம் ஏற்பட்டது. என்னை பொறுத்தவரை நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தில் மோதினர். இதில் மேட்வடெவ்வை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதனால் நடாலை பழித் தீர்க்கும் உத்வேகத்துடன் மேட்வடெவ் உள்ளார். இருவரும் இதுவரை நேருக்கு நேர் 4 முறை மோதியுள்ளனர். இதில் நடால் மூன்று முறையும், மேட்வடேவ் 1 முறையும் வென்றுள்ளனர். நாளை நடால் சாதனை படைப்பாரா இல்லை மேட்வடேவ் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பாரா என்று தெரிந்துவிடும்.

Story first published: Saturday, January 29, 2022, 22:24 [IST]
Other articles published on Jan 29, 2022
English summary
Australia open 2022 Finals Nadal vs Medvedev Head to Head, Previewஆஸி. ஓபன் டென்னிஸ்- உலக சாதனை படைப்பாரா நடால்! அதிர்ச்சி வைத்தியம் அளிக்க காத்திருக்கும் ரஷ்ய வீரர்!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X