For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸி, ஓபன்: ஜோகோவிச்சுக்கான முதல் போட்டி ரெடி!! ஆனால் நீடிக்கும் ஒரு சிக்கல்..ரசிகர்களுக்கு ஏமாற்றமா

பிரிஸ்பேன்: விசா பிரச்சினையே இன்னமும் முடிவடையாத சூழலில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

3வது டெஸ்டில் சீண்டிய ரபாடா.. 3 வருடமாக மறைத்து வைத்த ஆயுதத்தை எடுத்த விராட் கோலி.. தரமான பதிலடி 3வது டெஸ்டில் சீண்டிய ரபாடா.. 3 வருடமாக மறைத்து வைத்த ஆயுதத்தை எடுத்த விராட் கோலி.. தரமான பதிலடி

ஆனால் இதில் பங்கேற்பதில் தான் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2022

ஆஸ்திரேலிய ஓபன் 2022

ஜோகோவிச்சிற்கும் ஆஸ்திரேலிய அரசுக்கும் இடையேயான பிரச்சினை பூதாகராமாக வெடித்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்துக்கொள்ள அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் யார்? யார்? மோதுவது என்ற அட்டவணையை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் போட்டி ஏற்பாட்டாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

 முதல் சுற்று யாருடன்

முதல் சுற்று யாருடன்

செர்பியன் வீரரான நோவாக் ஜோகோவிச் தனது முதல் சுற்றுப் போட்டியில் மற்றொரு செர்பியன் வீரரான மியாமிர் கெக்மானொவிக்குடன் மோதவுள்ளார். எனினும் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மீண்டும் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்வதில் குறிக்கோளாக உள்ளார்.

 பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

2 கட்ட கொரோனா தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டவர்கள் தான் ஆஸ்திரேலிய நாட்டிற்குள் நுழைய முடியும். ஆனால் தடுப்பூசிகளில் நம்பிக்கை இல்லாத ஜோகோவிச், மருத்துவ விதிவிலக்குகளுடன் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தார். இதனால் அந்நாட்டு அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு விசா ரத்து செய்யப்பட்டது. நாடு கடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சட்டப்போராட்டம்

சட்டப்போராட்டம்

இதனை எதிர்த்து ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஜோகோவிச் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10ம் தேதி நடைபெற்ற விசாரணையில் அவருக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கியது. மேலும் விசாவையும் ஒப்படைக்குமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டது. எனினும் இன்னும் அதனை அந்நாட்டு அரசு நிறைவேற்றவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தான் ஜோகோவிச்சை விளையாட போட்டி ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளனர்.

Recommended Video

Djokovic Wins Court Battle, Cleared To Play Australian Open | OneIndia Tamil
கிராண்ட் ஸ்லாம் சாதனை

கிராண்ட் ஸ்லாம் சாதனை

இதுவரை 20 முறை நோவாக் ஜோகோவிச் கிரண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஏற்கனவே நடால், ஃபெடரர் போன்ற வீரர்களும் 20 முறை மட்டுமே பட்டம் வென்றுள்ளனர். இதனால் ஜோகோவிச் இந்த முறை தனது 21வது பட்டத்தை வென்று சாதனை படைக்க தீவிர முனைப்புடன் உள்ளார்.

Story first published: Thursday, January 13, 2022, 16:52 [IST]
Other articles published on Jan 13, 2022
English summary
Novak Djokovic Drawn To Play his first round in Australia Open 2022 Despite Visa Uncertainty
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X