ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- அழகிய இளம் புயல் வெற்றி..!! முதல் மேட்சே ஆன்டி முர்ரேவை ஓட விட்டாங்க..!!

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

நட்சத்திர வீரர் ஜோகோவிச்சின் கொரோனா தடுப்பூசி விவகாரத்தால், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த ஆஸி. ஓபனில் ஒரு வழியாக போட்டி தொடங்கியது

இந்த நிலையில், 2வது நாள் ஆட்டத்தில் எந்த வீரர்கள், வீராங்கனைகள் வெற்றி பெற்றனர் என்பதை தற்போது காணலாம்

 U-19 உலகக் கோப்பை- ஆஸ்திரேலிய அணியில் கலக்கிய தமிழக வீரர்..!! அதிசய திறமையால் அசத்தல். U-19 உலகக் கோப்பை- ஆஸ்திரேலிய அணியில் கலக்கிய தமிழக வீரர்..!! அதிசய திறமையால் அசத்தல்.

முகுருசா

முகுருசா

மகளிர் ஒற்றையர் பிரிவின் ஆட்டத்தின் முதல் சுற்றில் 2 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயினின் முகுரோசாவும், பிரான்ஸ் வீராங்கனை கிளாராவும் எதிர்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் 28 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் முகுருசா 6க்கு3, 6க்கு4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்

எமா ரடுகானு

எமா ரடுகானு

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்று புகழ் பெற்ற 19 வயது பிரிட்டன் வீராங்கனை எமா ரடுகானு, அமெரிக்க வீராங்கனை ஸ்லோவன் ஸ்டிபன்சை எதிர்கொண்டார். முதல் செட்டை அதிரடியாக விளையாடிய ரடுகானு 6க்கு0 என்ற செட் கணக்கில் வென்றார். இதனையடுத்து சுதாரித்து கொண்ட ஸ்டிபன் 2வது செட்டை 6க்கு2 என்ற கணக்கில் கைப்பற்ற, போட்டியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ரடுகானு, 6க்கு1 என்ற கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மெட்வடேவ்

மெட்வடேவ்

இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதலாம் சுற்று ஆட்டத்தில், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ரஷ்ய வீரர் மெட்வடேவ்வும், சுவிட்சர்லாந்து வீரர் ஹென்ரியும் மோதினர். சுமார் ஒரு மணி நேரம் 54 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் மெட்வடேவ் 6க்கு1, 6க்கு4, 7க்கு6 என்ற நேர் செட் கணக்கில் மெட்வடேவ் வென்றார். கடந்த முறை ஆஸி. ஓபனில் இறுதிப் போட்டி வரை வந்த மெட்வடேவ் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆன்டி முர்ரே

ஆன்டி முர்ரே

மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை ஜார்ஜியாவின் நிக்கோலஸ் எதிர்கொண்டார். சுமார் 3 ஆண்டுக்கு பிறகு ஆஸி. ஓபனில் களமிறங்கிய ஆன்டி முர்ரேவை நிக்கோலஸ் ஓட விட்டார். இருப்பினும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய முர்ரே 6க்கு1, 3க்கு6, 6க்கு4, 6க்கு7,6க்கு4 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 52 நிமிடம் வரை நீடித்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Australia open tennis 2022 Day 2 Highlights Andy Murray, Emma Radacanu Winsஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- முதல் மேட்சே ஓட விட்டாங்க..!! வெற்றியாளர்கள் யார்?
Story first published: Tuesday, January 18, 2022, 21:08 [IST]
Other articles published on Jan 18, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X