For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“டென்னிஸ் உலகின் பெரும் அதிர்ஷ்டம்”.. ரஃபேல் நடால் கொடுத்த சர்ஃப்ரைஸ்.. 21வது கிராண்ட் ஸ்லாம் ரெடி!

மெல்பேர்ன்: 2022ம் ஆண்டு தொடக்கத்திலேயே டென்னின்ஸ் உலகில் புதிய சர்ஃப்ரைஸ் கொடுத்துள்ளார் ரஃபேல் நடால்.

உலகின் மிகப்பெரும் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் 2022 டென்னிஸ் போட்டிகள் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறுகிறது.

முன்னணி வீரர்கள் யாரும் பங்கு பெற மாட்டார்கள் என்று வெளியான தகவலால், இந்த தொடரை ரசிகர்கள் பெரிதும் கண்டுக்கொள்ளாமல் இருந்தனர்.

“உலகின் 4வது சிறந்த கேப்டன்” புதிய சரித்திரம் படைத்த விராட் கோலி..ஜாம்பவான்கள் வரிசையில் சேர்ந்தார்“உலகின் 4வது சிறந்த கேப்டன்” புதிய சரித்திரம் படைத்த விராட் கோலி..ஜாம்பவான்கள் வரிசையில் சேர்ந்தார்

சர்ஃப்ரைஸ் கொடுத்த நடால்

சர்ஃப்ரைஸ் கொடுத்த நடால்

இந்நிலையில் ஸ்பெய்னின் வீரர் ரஃபேல் நடால் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார். சமீபத்தில் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அபுதாபியில் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கண்காட்சி போட்டியில் பங்கேற்றபோது தொற்று பரவியதாக கூறப்பட்டது.

ஆஸி, ஓபன் தொடர்

ஆஸி, ஓபன் தொடர்

இதனால் நீண்ட ஓய்வில் இருந்த அவர், நேற்று திடீரென ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ளார். அங்குள்ள மெல்பேர்ன் மைதானத்தில் நின்றுள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவர் தனது 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல தயாராகிவிட்டது தெரியவந்துள்ளது.

 உலக சாதனை

உலக சாதனை

இந்த தொடரில் நடால் மட்டும் பட்டம் வென்றுவிட்டால் புதிய உலக சாதனையை படைக்கலாம். ஏனென்றால் இதுவரை உலகின் முன்னணி வீரர்களாக பார்க்கப்படும் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோரும் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

சரியான வாய்ப்பு

சரியான வாய்ப்பு

ஆனால் இவர்கள் இருவருமே ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத்தெரிகிறது. ஜோகோவிச், இன்னும் 2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டதை உறுதி செய்ய எந்த ஆவணத்தையும் சம்ர்பிக்கவில்லை. இதே போல ரோஜர் ஃபெடரர் காயம் காரணமாக தாமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். எனவே இந்த முறை நிச்சயம் நடால் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 31, 2021, 16:28 [IST]
Other articles published on Dec 31, 2021
English summary
Rafael Nadal arrived for the australian open 2022, all set for the 21st Grand Slam, check details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X