டென்னிஸில் இருந்து வருத்தத்துடன் விடை பெற்றார் சானியா மிர்சா.. ஆஸி,ஓபன் தந்த ஏமாற்றம்.. விவரம்!

மெல்பேர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கிடைத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றுள்ளார் சானியா மிர்சா.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு ஆஸ்திரேலிய ஓபன் தொடரே கடைசி சீசனாக அமைந்தது.

IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?

உடல் ஒத்துழைக்காததாலும், தாய்மையின் காரணமாகவும், இந்த தொடருடன் ஓய்வு பெற போவதாக சானியா மிர்சா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சானியாவின் ஆட்டம்

சானியாவின் ஆட்டம்

அதன்படி இந்த தொடரில் சானியா விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்திருந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் உக்ரைனை சேர்ந்த நாடியா கிச்சேனாக் ஆகியோர் இணைந்து ஆடினர். ஆனால் 6 - 4, 7 - 6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தனர். எனினும் ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு பிரிவில் சிறப்பாக விளையாடி காலிறுதி வரை முன்னேறினார்.

காலிறுதி சுற்று

காலிறுதி சுற்று

இந்நிலையில் இன்று காலிறுதியிலும் ஏமாற்றம் கிடைத்தது. இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் சானியா - ராஜீவ் ராம் ஜோடி மற்றும் ஜேசன் குப்ளர், ஜேமீ ஃபோர்லிஸ் ஜோடி மோதின. முதல் சுற்றில் சானியா ஜோடி சொதப்பியதால் 6 - 4 என பின் தங்கினர்.

பரபரப்பு சுற்று

பரபரப்பு சுற்று

எனினும் 2வது சுற்றில் தரமான கம்பேக் கொடுத்தனர். இரு அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியதில் ஆட்டம் 5 - 5 என பரபரப்பாக இருந்தது. எனினும் சானியா ஜோடியால் வெற்றி பெற முடியவில்லை. 6 - 4, 6 - 4, 7 -6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினர். இது தான் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சானியா விளையாடும் கடைசி போட்டியாகும்.

 ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

இதனையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி டென்னிஸ் விளையாட்டில் இருந்து சானியா மிர்சா ஓய்வு பெற்றார். அவர் தோல்வியுடன் விடைபெற்ற போதும், சமூக வலைதளங்களில் அவருக்காக ரசிகர்கள் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர். முன்னணி வீரர்களும் வாழ்த்துக்கூறி வருகின்றனர். 35 வயதாகும் சானியா மிர்சா 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவரே ஆகும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian tennis star Sania Mirza retired from tennis. The Australian Open series 2022 was the last season for India's leading tennis player Sania Mirza.
Story first published: Tuesday, January 25, 2022, 15:55 [IST]
Other articles published on Jan 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X