For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலிய காட்டுத்தீ : கேன்பெரா சர்வதேச டென்னிஸ் போட்டி இடமாற்றம்

கேன்பெரா : ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான கேன்பெரா சர்வதேச டென்னிஸ் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த 2015 முதல் நடத்தப்பட்டு வரும் கேன்பெரா சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஏடிபி சேலஞ்சர் 125 மற்றும் மகளிர் ஐடிஎப் உலக டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகிறது.

இதனிடையே, வீரர்கள், ரசிகர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டென்னிஸ் ஏசிடி தலைவர் கிம் காச்செல் தெரிவித்துள்ளார்.

அவர் இருக்குற வரைக்கும் இந்தியாவை வீழ்த்த முடியாது.. இலங்கை அணியின் படுமோசமான வரலாறு!அவர் இருக்குற வரைக்கும் இந்தியாவை வீழ்த்த முடியாது.. இலங்கை அணியின் படுமோசமான வரலாறு!

புகைமண்டலமாக காணப்படும் கேன்பெரா

புகைமண்டலமாக காணப்படும் கேன்பெரா

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் அங்கு சிட்னி, கேன்பெரா உள்ளிட்ட பல பகுதிகள் புகை மூட்டத்துடன் காணப்படுகின்றன. எதிரில் வருபவர்களையும் காணமுடியாத அளவிற்கு புகைமூட்டம் காணப்படுகிறது.

இடமாற்றம் செய்ய நிர்வாகிகள் முடிவு

இடமாற்றம் செய்ய நிர்வாகிகள் முடிவு

திங்கட்கிழமை முதல் துவங்கப்பட வேண்டிய கேன்பெரா சர்வதேச டென்னிஸ் போட்டிகளை அங்கு நடத்த முடியாத சூழல் எற்பட்டுள்ளதால், போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

கேன்பெரா போட்டியில் பங்கேற்பு

கேன்பெரா போட்டியில் பங்கேற்பு

பிரான்சின் யூகோ ஹம்பர்ட், இத்தாலியின் ஆன்ட்ரீஸ் செப்பி, ஜெர்மனியின் பிலிப் கோல்ச்ரேய்பர் ஆகிய டென்னிஸ் தரவரிசையில் முதல் 100 இடங்களின் வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

போட்டியை நடத்த முடிவு

போட்டியை நடத்த முடிவு

கேன்பெராவில் நடைபெறவிருந்த இந்த போட்டிகளை 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விக்டோரியா மாகாணத்தின் பெண்டிகோவில் நடத்த நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.

நிர்வாகிகள் உறுதி

நிர்வாகிகள் உறுதி

வீரர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் ரசிகர்களின் உடல்நலத்திற்கே தாங்கள் எப்போது முன்னுரிமை அளிப்பதாகவும் அதனாலேயே இந்த போட்டிகளை இடமாற்றம் செய்துள்ளதாகவும் டென்னிஸ் ஏசிடி தலைவர் கிம் காச்செல் தெரிவித்துள்ளார்.

துல்லியமான களநிலவரம்

துல்லியமான களநிலவரம்

இதனிடையே, நியூ சவுத் வேல்ஸ், சவுத் ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா போன்ற பகுதிகளில் காட்டுத்தீ குறித்த தகவல்களை தொடர்ந்து அறிந்து வருவதாக டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் தலைவர் க்ரெய்க் டிலே தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, January 3, 2020, 16:40 [IST]
Other articles published on Jan 3, 2020
English summary
Canberra International Tennis event relocated because of bushfire
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X