For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடாலுக்கு அடுத்தது பெடரர்… ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் சிலிக்

By Staff

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பைனலுக்கு குரேஷியாவின் மரின் சிலிக் தகுதி பெற்றார். முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் விளையாட உள்ள அவர், ஜாம்பவான் ரோஜர் பெடரரை சந்திப்பதற்காக காத்திருக்கிறார்.

நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன், மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. இதில் ஆடவர் பிரிவின் பைனலுக்கு குரேஷியாவின் மரின் சிலிக் முன்னேறினார்.

Cilic in Finals


கால் இறுதியில், ரபேல் நடாலை வென்ற அவர், அரை இறுதியில், தரவரிசையில் 49வது இடத்தில் உள்ள பிரிட்டனின் கைல் எட்மண்டுடன் மோதினார். 2 மணி நேரம் 18 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில், 6-2, 7-6, 6-2 என்ற செட்களில் வென்று மூன்றாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியின் பைனலுக்கு முன்னேறினார்.

2014 அமெரிக்க ஓபன் சாம்பியனான சிலிக், கடந்தாண்டு விம்பிள்டன் பைனலில் ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் பைனலுக்கு நுழைந்த முதல் குரேஷிய வீரரான சிலிக், பெடரரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அரையிறுதியில் தென் கொரியாவின் ஹூவான் சுங்கை சந்திக்கிறார்.

மகளிர் பிரிவின் அரை இறுதியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை 6-3, 4-6. 9-7 என்ற செட்களில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ருமேனியாவின் சைமனோ ஹாலப் வென்றார். மற்றொரு அரை இறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி 6-3, 7-6 என்ற செட்களில் பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸை வென்றார்.

Story first published: Friday, January 26, 2018, 16:43 [IST]
Other articles published on Jan 26, 2018
English summary
Marin Cilic enters Australian open finals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X