For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உழைப்பு... தன்னம்பிக்கை.. வெற்றியின் அடையாளம்... இது சரத் கமலின் சக்சஸ் மந்திரம்

டெல்லி: விளையாட்டுத் துறையை பொருத்தவரை திறமை இருந்தால் மட்டும் போதாது. அதனுடன் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயமாக வெல்லலாம் என்று அடிக்கடி கூறும் சரத்கமல், பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். டேபிள் டென்னிஸ் என்ற விளையாட்டை தமிழகத்தில் அதிகளவு அறிமுகப்படுத்தியவர் என்றே கூறலாம்.

சமூக சேவை, கலை, பொது விவகாரங்கள், அறிவியல், இன்ஜினியரிங், வர்த்தகம், தொழில்துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.

இந்தாண்டுக்குரிய பத்ம விருதுகள் ஒட்டுமொத்தமாக 112 பேருக்கு வழங்கப் படுகிறது. விருது பெறுவோரில் 21 பேர் பெண்கள் ஆவர். இதுதவிர, வெளி நாடுகளை சேர்ந்த 11 பேர், மறைந்தவர்கள் 3 பேர் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் சிறந்த அணிகள்

ஆசியாவின் சிறந்த அணிகள்

விளையாட்டுதுறை சாதனை படைத்த அச்சந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். டேபிள் டென்னிசை பொறுத்தவரை 10 சிறந்த அணிகள் ஆசிய கண்டத்தில் தான் உள்ளன.

வாழ்த்துகள் குவிகின்றன

வாழ்த்துகள் குவிகின்றன

அந்த அடிப்படையில் டேபிள் டென்னிஸ் என்று எடுத்துக் கொண்டால் தொடக்கம் முதலே அனைவராலும் அறியப்படுபவர் சரத் கமல். அவர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பலதரப்பிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொடரும் சாதனை

தொடரும் சாதனை

தமிழக வீரர் சரத்கமல் பல்வேறு போட்டிகளில் வென்று சாதனை படைத்து உள்ளார். நுங்கம்பாக்கத்திலுள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியிலும். லயோலா கல்லூரியிலும் பயின்றவர்.

2004ம் ஆண்டில் தங்கப்பதக்கம்

2004ம் ஆண்டில் தங்கப்பதக்கம்

ஆரம்பம் முதலே டேபிள் டென்னிஸ் போட்டியில் முத்திரை பதித்து வந்த சரத் கமல் 2004ம் ஆண்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டு தாய்நாட்டுக்காக தங்க பதக்கம் வென்று திரும்பிய போது தான் அனைவராலும் வெகுவாக அறியப்பட்டார்.

9 வருடங்கள்

9 வருடங்கள்

அதே கோலாலாம்பூர் போட்டியில் இந்தியாவின் ஆண்கள் அணிக்குத் தலைமை தாங்கி ஒன்பது ஆண்டுகள் வெற்றியாளர்களாக திகழ்ந்த இங்கிலாந்து அணியை வென்றார். சிறந்த அணிகளுக்கான விருதினையும் இந்தியாவுக்கு சரத் கமல் பெற்று தந்தார்.

காமன்வெல்த் போட்டி

காமன்வெல்த் போட்டி

அந்த சாதனைகை கவுரப்படுத்தும் விதமாக மத்திய அரசு அவருக்கு 2004ம் ஆண்டு அர்ஜீனா விருது வழங்கியது. அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த காமன் வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதியாட்டத்தில் கூட்டத்தினரின் விருப்பமான ஆஸ்திரேலிய வீரர் வில்லியம் ஹென்செல்லை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

கத்தார் ஆசிய போட்டி

கத்தார் ஆசிய போட்டி

இந்திய அணி சிங்கப்பூர் அணியை வென்று தங்கப்பதக்கம் பெறவும் முதன்மை பங்காற்றினார். 2004ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு க்களிலும், 2006ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுக்களிலும் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்துள்ளார். இந்தியாவின் முதல்நிலையில் நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார்.

கடின உழைப்பு வேண்டும்

கடின உழைப்பு வேண்டும்

மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையில் சாதிக்க வேண்டுமானால் முதலில் தங்களது உடல் நலத்தையும், மன நலத்தையும் நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு விளையாட்டு மிகவும் அவசியம். விளையாட்டுத் துறையை பொருத்தவரை திறமை இருந்தால் மட்டும் போதாது. அதனுடன் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயமாக விளையாட்டுத் துறையில் சாதிக்கலாம் என்பது சரத் கமல் அடிக்கடி கூறும் வார்த்தையாகும்.

Story first published: Saturday, January 26, 2019, 15:16 [IST]
Other articles published on Jan 26, 2019
English summary
Ace Indian paddler Sharath Kamal had a fantastic 2018 and now he selected for padma awards announced by government.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X