For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா - பாகிஸ்தான் டென்னிஸ் தொடர் மீண்டும் நடக்க வாய்ப்பு.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

டெல்லி : முன்னதாக தள்ளி வைக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆன டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் வரும் நவம்பர் 29, 30 அல்லது நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 தேதிகளில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் டேவிஸ் கோப்பை மோதல் முன்னதாக செப்டம்பர் 14 - 15 அன்று நடைபெற இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தொடரை தள்ளி வைத்தது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு.

Davis Cup India - Pakistan tie to be held on November end says reports

காஷ்மீர் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வந்த பதற்ற சூழ்நிலையே இந்த தொடர் தள்ளிப் போக காரணம் என கூறப்பட்டாலும், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து தொடரை தள்ளி வைத்து இருந்தது.

டேவிஸ் கோப்பை தொடர் நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது. மேலும், செப்டம்பர் 9 அன்று எந்த தேதிகளில் தொடர் நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறி இருந்தது அந்த அமைப்பு.

இந்த நிலையில், தற்போது டேவிஸ் கோப்பை தொடர் வரும் நவம்பர் 29, 30 அல்லது நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 தேதிகளில் நடைபெறலாம் என தகவல் கிடைத்துள்ளது.

ஏம்பா.. நம்பி கேப்டன் பதவி கொடுத்தா இப்படியா உங்க இஷ்டத்துக்கு பண்ணுவீங்க? ரொம்ப தில்லு தான்!ஏம்பா.. நம்பி கேப்டன் பதவி கொடுத்தா இப்படியா உங்க இஷ்டத்துக்கு பண்ணுவீங்க? ரொம்ப தில்லு தான்!

மேலும், நவம்பர் 4 அன்று பாதுகாப்பு ஆய்வு நடத்தப்படும் எனவும், அந்த ஆய்வில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணம் செய்வது பாதுகப்பானாதா என உறுதி செய்த பின்னரே தொடர் நடப்பது உறுதி ஆகும் எனவும் கூறப்படுகிறது.

அதனால், டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு ஒப்புக் கொண்டு, அந்த நாட்டிற்கு செல்ல தயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 13, 2019, 19:30 [IST]
Other articles published on Sep 13, 2019
English summary
Davis Cup India - Pakistan tie to be held on November end says reports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X