அமெரிக்க ஓபன் டென்னிஸ்-ல் தமிழ் வசனம்.. கமலின் தரமான வார்த்தைகள்.. காரணம் என்ன தெரியுமா?? - விவரம்

அமெரிக்கா: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரைப்பட வசனம் இடம்பெற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended Video

Rafael Nadal-க்கு என்ன ஆச்சு? Wimbledon-லிருந்து விலகல் | *Sports | OneIndia Tamil

மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்ற உலகின் முன்னணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

 அமெரிக்க ஓபன் டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

இதே போல அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் குறித்து சமூக வலைதளங்களிலும் விளம்பர பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அத்தொடரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரைப்பட வசனமான "கட்டிப்புடி வைத்தியம்" எனக்குறிப்பிட்டிருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்ய ட்வீட்

சுவாரஸ்ய ட்வீட்

அந்த பதிவில், நோவாக் ஜோகோவிச் மற்றும் டேனி மெத்வெடேவ் ஆகியோர் கட்டி அனைத்துக்கொள்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, இந்தியர்களே உங்களின் கட்டிப்புடி வைத்தியம் இங்கு நடந்துள்ளது. இது எப்போது நடைபெற்ற நிகழ்வு என்பது உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? எனக்கேட்டுள்ளனர்.

 என்ன நிகழ்வு அது?

என்ன நிகழ்வு அது?

கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் மற்றும் டேனி மெத்வெடேவ் ஆகியோர் மோதினர். இதில் ஜோகோவிச் ஒரே ஆண்டில் தனது 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல முயன்றார். ஆனால் டேனி 6 -4, 6-4, 6 - 4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இதன்பின்னர் ஜோகோவிச்சை தோற்கடித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார். அப்போது இருவரும் கட்டி அணைத்துக்கொண்டனர்.

தீயாய் பரவு போட்டோ

தீயாய் பரவு போட்டோ

இதுகுறித்த புகைப்படத்தை தான் தற்போது அமெரிக்க ஓபனின் ட்விட்டர் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே இந்த பதிவு நீக்கப்பட்ட போதும், ரசிகர்கள் புகைப்படத்தை இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்காக ரோஜர் ஃபெடரர் புகைப்படத்துக்கு வாத்தி கம்மிங் கேப்ஷனை போட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Tamil Dialgoue US Open Tennis twitter page ( அமெரிக்க ஓபன் டென்னிஸில் தமிழ் வசனம் ) அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழ் திரைப்பட வசனம் இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
Story first published: Thursday, August 18, 2022, 23:15 [IST]
Other articles published on Aug 18, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X