பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- இறுதி போட்டியில் மாணவனை எதிர்கொள்ளும் ஆசிரியர் நடால்.. 4 ஆண்டில் அதிசயம்

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 13 முறை சாம்பியனான நடால், நார்வே வீரர் ரூத் கேஸ்பரை எதிர்கொள்ள உள்ளார்.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் இதுவரை நடால் ஒரு முறை கூட தோற்றது இல்லை.

பிரெஞ்ச் ஓபன் வரலாற்றில் 114 போட்டிகளில் விளையாடியுள்ள நடால், இதில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருக்கிறார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - நடால் புதிய சாதனை.. அரையிறுதியில் ஜெர்மனி வீரருக்கு காயம்.. கால் மடங்கியதுபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - நடால் புதிய சாதனை.. அரையிறுதியில் ஜெர்மனி வீரருக்கு காயம்.. கால் மடங்கியது

நடாலின் மாணவன்

நடாலின் மாணவன்

இறுதிப் போட்டியில் நடாலை எதிர்கொள்ளும், ரூத் கேஸ்பர் கடந்த 2018ஆம் ஆண்டு நடாலின் டென்னிஸ் அகாடமியில் தான் பயிற்சி எடுத்து கொண்டார். தற்போது நான்கே வருடங்களில் தனது ஆசிரியர் நடாலுடன் மோத உள்ளார். மேலும் நடாலின் தீவிர ரசிகரான ரூத், 2013ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியை நேரில் கண்டுள்ளார்.

கனவு நிறைவேறியது

கனவு நிறைவேறியது

இது குறித்து பேசிய ரூத் நடால் தன்னுடைய மாணவனுடன் மோத உள்ளார். இதை நினைக்கும் போதே குஷியாக இருக்கிறது. இந்த தருணத்திற்காக தான் இவ்வளவு நாள் காத்து கொண்டு இருந்தேன். இது என்னுடைய கனவு என்று கூட சொல்லலாம். நடாலை தவிர டாப் வீரர்கள் அனைவருடனும் விளையாடி இருக்கிறேன். நடாலுடன் இப்போது தான் மோத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நடாலின் சாதனை

நடாலின் சாதனை

இதே போன்று பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் மோதும் 2வது வயதான வீரர் என்ற பெருமையை நடால் பெறுகிறார். அரையிறுதியில் நடால் சற்று தடுமாறினாலும், ஸ்வெரேவ் விலகியதால், நடாலுக்கு இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய மாணவன் குறித்து நடால் பாராட்டி பேசினார்.

14 வது பட்டம் வெல்வாரா?

14 வது பட்டம் வெல்வாரா?

ரூத் தனது கனவை துரத்தி நிறைவேற்றி இருக்கிறார்.இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரூத்தின் தந்தை, தாய் நினைத்தும் பெருமைப்படுகிறேன். அகாடமியில் பயிற்சி மேற்கொண்டது அவருக்கு உதவும் என நினைக்கிறேன். என் காலில் ஏற்பட்ட காயம் உண்மை தான். ஆனால், இன்னொரு இறுதிப் போட்டியில் விளையாட முடிகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடால் கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
French open tennis final – Nadal facing his academy student casper Ruud பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- இறுதி போட்டியில் மாணவனை எதிர்கொள்ளும் ஆசிரியர் நடால்.. 4 ஆண்டில் அதிசயம்
Story first published: Sunday, June 5, 2022, 11:01 [IST]
Other articles published on Jun 5, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X