For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உஸ்ஸ்ஸ்… அப்பா, தாங்க முடியலையே,…. ஆஸ்திரேலிய ஓபனில் வீரர்கள் புழுக்கம்

By Staff

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. மூன்றாவது சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், போட்டி சூடு பிடித்துள்ளது. வெயில் கடுமையாக இருப்பதால், வீரர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

நான்கு கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது கடும் கோடைக்காலம். அங்கு நேற்று 40 டிகிரி செல்சியல், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் இருந்தது.

Heat in Aus open


அதனால், மைதானத்தில் தொடர்ந்து விளையாட முடியாமல் பல வீரர்கள் திணறினர். குறிப்பாக நோவாக் ஜோகிவிச்சுக்கு எதிரான இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பிரான்சின் கோயல் மோன்பில்ஸ் சோர்ந்து போய்விட்டார். ஈர டவல் போர்த்தி, தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டும், சூட்டை தாங்க முடியாமல் திணறினார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-1, 6-3 என்ற செட்களில் வென்றார்.

காயம் காரணமாக சில காலம் விளையாடாமல் இருந்த ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ வலியை மறந்து சிறப்பாக விளையாடினார். ஆனால், எதிர் வீரரைவிட, வெயிலை சமாளிப்பதுதான் போட்ரோவுக்கு பெரும் சவாலாக இருந்தது.

போட்டியில் வென்றாலும், ஜோகோவிச்சும் உடல் சோர்ந்துதான் காணப்பட்டார். இந்த வெயிலில் விளையாடுவது ரொம்ப கஷ்டம் என்று அவர் கூறியுள்ளார்

“மற்ற விளையாட்டுகளைப் போல, டென்னிஸ் தற்போது ஒரு தொழிலாக மாறிவிட்டது. அதே நேரத்தில் வீரர்களின் உடல்நலனையும் கவனிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான பிரச்னை,” என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் வெயில் கொள்கையின்படி, 40 டிகிரி செல்சியஸ் வெயில் இருந்தால், போட்டி நிறுத்தப்படும். அல்லது, வாய்ப்புள்ள மைதானங்கள் மேல்கூரையால் மூடப்படும்.

நகரில் எவ்வளவு வெயில் இருந்தாலும், மைதானத்தில் உள்ள வெட்பல்ப் குளோப்ஸ் எனப்படும் கருவியில், 32 டிகிரி செல்சியஸ் வெயில் காட்டினால் மட்டுமே இந்த வாய்ப்பு அளிக்கப்படும்.

வெயில் அதிகமாக இருந்ததால், போட்டியைப் பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் வெயில் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால், போட்டியில் அனல் பறக்கிறதோ இல்லையோ, மைதானத்தில் அனல் பறக்கும்.

Story first published: Friday, January 19, 2018, 19:42 [IST]
Other articles published on Jan 19, 2018
English summary
Heat made player struggle in Aus open
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X