For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரீனா வில்லியம்ஸ் வயிற்றிலுள்ள குழந்தை யாரை மாதிரி இருக்கும்? டென்னிஸ் வீரரின் கேவலமான கமெண்ட்

டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு பிறக்கும் குழந்தை எந்த நிறத்தில் இருக்கும் என்று கேட்ட ருமேனிய நாட்டின் ஃபெட் கோப்பை போட்டியின் டென்னீஸ் கேப்டன் இனவெறி கருத்

By Lakshmi Priya

கான்ஸ்டான்டா: டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு பிறக்கும் குழந்தை எந்த நிறத்தில் இருக்கும் என்று கேட்ட ருமேனிய நாட்டின் ஃபெட் கோப்பை போட்டியின் டென்னீஸ் கேப்டன் இனவெறி கருத்து தெரிவித்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

23 முறை டென்னீஸ் ஒற்றையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கும், அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் கடந்த டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டத்தை வென்ற பிறகு எந்தவொரு போட்டியிலும் ஆடாத 35 வயதான செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

 செரீனா குறித்து கேள்வி

செரீனா குறித்து கேள்வி

இந்நிலையில் ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து-ருமேனியா அணிகள் இடையிலான போட்டி அட்டவணை குறித்த டிரா, ருமேனியாவில் உள்ள கான்ஸ்டான்டாவில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப்பிடம், செரீனாவின் கர்ப்பம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

 குழந்தையின் நிறம்

குழந்தையின் நிறம்

அப்போது அருகே இருந்த ருமேனிய நாட்டின் ஃபெட் கோப்பை போட்டி முன்னாள் டென்னிஸ் அணி கேப்டன் லீ நாஸ்டாஸ், செரீனாவுக்கு பிறக்க போகும் குழந்தை எந்த நிறத்தில் இருக்கும் என்பதை குழந்தை பிறந்தவுடன் பார்க்க வேண்டும். குழந்தை பாலில் கலந்து சாக்லெட் நிறத்தில் இருக்குமா என்று இனவெறியைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

 விசாரணை

விசாரணை

செரீனா கருப்பினத்தை சேர்ந்த அமெரிக்கர், அவரது கணவர் ஒஹானியன் வெள்ளை இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர். எனவே இதை குறிப்பிடும் வகையில் நாஸ்டாஸ் கருத்து தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தனது விசாரணையை நாஸ்டாஸிடம் தொடங்கி இருக்கிறது.

 நடவடிக்கை நிச்சயம்

நடவடிக்கை நிச்சயம்

இதுகுறித்து அந்த சம்மேளத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கையில், இனவெறி தொடர்பான கருத்து மற்றும் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். ருமேனியா அணியின் முன்னாள் வீரர் லீ நாஸ்டாவின் தரக்குறைவான கருத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முடிவில் உண்மையை அறிந்த பின்னர்

அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Story first published: Sunday, April 23, 2017, 14:51 [IST]
Other articles published on Apr 23, 2017
English summary
Ilie Nastase could face disciplinary action after apparently making a racist comment about Serena Williams' pregnancy on the eve of Romania's Fed Cup playoff against Great Britain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X