For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

405 நாள் காத்திருப்பு... 2 அறுவை சிகிச்சை.. மீண்டும் களத்திற்கு வந்த ரோஜர் பெடரர்.. கம்பேக் வெற்றி!

தோஹா : கடந்த 405 நாட்கள் எந்த போட்டிகளிலும் பங்கேற்காத டென்னிசின் அதிரடி வீரர் ரோஜர் பெடரர் தற்போது மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்த கால கட்டத்தில் அவருக்கு முட்டியில் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது கத்தார் ஓபன் 2021 டென்னிஸ் தொடரில் பிரிட்டன் வீரர் டான் இவான்சை ரோஜர் வெற்றி கொண்டுள்ளார்.

கத்தார் ஓபனில் பங்கேற்பு

கத்தார் ஓபனில் பங்கேற்பு

கடந்த 405 நாட்களாக சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் விலகியிருந்தார் சர்வதேச முன்னணி ஸ்விஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். ஆனால் தற்போது அவர் கத்தார் ஓபன் 2021 தொடரில் பங்கேற்று பிரிட்டன் வீரர் டான் இவான்சை 7 -6, 3 -6, 7 -5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கொண்டுள்ளார்.

சிறப்பான திரும்புதல்

சிறப்பான திரும்புதல்

இந்த போட்டியில் வெற்றி கொள்ள அவருக்கு 2 மணிநேரங்கள் மற்றும் 24 வினாடிகள் தேவைப்பட்டது. இந்த 405 நாட்களில் பயிற்சிகளிலும் முறையாக ஈடுபட முடியாமல் இருந்த பெடரருக்கு முட்டியில் 2 முறை அவருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும் அவர் தற்போது சிறப்பான திரும்புதலை தந்துள்ளார்.

நம்ப முடியாத உற்சாகம்

நம்ப முடியாத உற்சாகம்

தோஹாவில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி கொண்டுள்ளது குறித்து பெடரர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வெற்றி நம்ப முடியாத உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் காலிறுதியில் நிகோலஸ் பாசிலாஸ்விலியுடன் மோதவுள்ளனார்.

நிறைவான வரவேற்பு

நிறைவான வரவேற்பு

20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ரோஜர் பெடரர், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில், கொரோனா காரணமாக அரங்கத்தில் குறைவான ரசிகர்களே அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அவர்களுக்கு தனது வெற்றியை பரிசளித்துள்ளார் பெடரர்.

Story first published: Thursday, March 11, 2021, 12:27 [IST]
Other articles published on Mar 11, 2021
English summary
Federer repaid fans for their support with a thrilling Opening set
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X