டேவிஸ் கோப்பை போட்டி.. கஜகஸ்தானில் மோதப் போகும் இந்தியா பாகிஸ்தான் அணிகள்

புதுடெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நடைபெறவுள்ள ஆசியா -ஓசியானா குரூப் 1 டேவிஸ் கோப்பை டை போட்டி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது கஜகஸ்தானில் நடைபெறவுள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி தற்போது கஜகஸ்தானின் நுர்-சுல்தான் என்ற இடத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

எல்லையில் பதற்றம் நிலவிவரும் சூழலில், டேவிஸ் கோப்பை டை போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது போட்டி நடக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதல்

ஆசியா -ஓசியானா குரூப் 1 டேவிஸ் கோப்பை டை டென்னிஸ் போட்டிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

காயம் காரணமாக போபண்ணா விலகல்

இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ராஜ்பால், சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், சாகத் மைநேனி, ரோஹன் போபண்ணா மற்றும் லியாண்டர் பயஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சீனியர் வீரர் ரோகன் போபண்ணா இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸில் ரஹானே, அஸ்வின்.. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரா.. அல்லது மாற்றப்படுவாரா!

இரட்டையர் பிரிவில் விளையாடுவார்

இந்நிலையில் போபண்ணாவிற்கு பதிலாக தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லியாண்டர் பயசுடன் இணைந்து இரட்டையர் பிரிவு போட்டியில் விளையாடுவார் என்று டென்னிஸ் சங்க பொது செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி அறிவித்திருந்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Davis Cup tie Tennis match between India & Pakistan plans in Kazakhstan
Story first published: Tuesday, November 19, 2019, 16:48 [IST]
Other articles published on Nov 19, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X