சுமித் நாகலின் திறமையை முன்பே அறிந்த நம்ம கேப்டன்..!! நாங்கள் இருக்கிறோம்.. குட்லக்..!

sumit nagal trained well before met roger federer in us open tennis

நியூயார்க்: யுஎஸ் ஓபனில் பெடரரை அசைத்து பார்த்த இந்திய இளம் புயல் சுமித் நாகலின் திறமையை முன்பே அறிந்திருந்த இந்திய கேப்டன் கோலி, அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்டார் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 190வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகலை எதிர் கொண்டார்.

துவக்கத்தில் அசத்திய நாகல் முதல் செட்டை 6க்கு 4 என வென்றார். பின் எழுச்சி கண்ட பெடரர், அடுத்த 3 செட்டுகளை கைப்பற்றினார். நாகலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்த சுற்று

அடுத்த சுற்று

பெடரரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த இளம் வீரர் நாகல் தகுதிபெற்று, முதல் முறையாக யுஎஸ் ஓபன் டென்னிஸ் பிரதான சுற்றுக்கு முன்னேறினார். அப்போது அவருக்கு வாழ்த்துகள் குவிந்தாலும் யாரும் பெரிதளவு அலட்டிக் கொள்ள வில்லை.

வாழ்த்துகள் தேவை

வாழ்த்துகள் தேவை

ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்த்துகளும் அவருக்கு தேவைப்பட்டது. காரணம், அவர் தனது முதலாவது சுற்றில், டென்னிஸ் உலகின் முன்னணி வீரர் ரோஜர் பெடரரை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

டிரெண்டானார்

டிரெண்டானார்

முதலாவது சுற்றில் பெடரரை சந்தித்தார். முன்னணி வீரரை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற அச்சமே இன்றி இயல்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். முதல் செட்டை 6க்கு 4 என்று கைப்பற்ற டிரெண்டானார்.

வாழ்த்து சொன்ன கோலி

வாழ்த்து சொன்ன கோலி

உலகின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. அந்த சுற்றில் அவர் தோற்கவில்லை, சுதாரித்துக் கொண்ட பெடரர் பின்னர் விளையாடி ஜெயித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்டத்தில் அவர் தோற்றாலும், போட்டிக்கு முன்பே அவரது திறமையை அறிந்து கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி வாழ்த்து கூறியிருக்கிறார் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

உற்சாகப்படுத்துகிறோம்

அவர் தமது வாழ்த்தில் கூறியிருப்பதாவது: யு.எஸ் ஓபனுக்கு தகுதி பெற்றதற்கு வாழ்த்துகள் சுமித் நாகல். உங்களுக்கு பெரும் போட்டி ஒன்று இருக்கிறது. கிரேட் ரோஜர் பெடரரை எதிர்கொள்ள உள்ளீர்கள். உங்களை நாங்கள் உற்சாகப் படுத்துவோம். குட்லக்! என்று கூறியிருக்கிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Indian skipper virat kohli praises young tennis player sumit nagal.
Story first published: Tuesday, August 27, 2019, 20:23 [IST]
Other articles published on Aug 27, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more