என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க..? சீனாவை மிரட்டிய சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம்..

பெய்ஜிங்; சீன முன்னாள் துணை அதிபர் சாங் கயோலி மீது Me too புகார் ஒன்றை சீனாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை பெங் சூயி கூறியிருந்தார்.

புகார் கூறிய சில மணி நேரத்திலேயே பெங் சூயி மாயமான தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் பெங் சூயி அளித்த புகார் தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையத்தளத்திலிருந்து சீனா நீக்கியது.

இது தொடர்பாக தங்களது கவலையை வெளிப்படுத்திய சர்வதேச டென்னிஸ் சம்மேளனம், பெங் சூயியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது

அதிர்ச்சி.. சீன முன்னாள் துணை அதிபர் மீது #Metoo புகார் அளித்த டென்னிஸ் வீராங்கனை மாயம்..!! அதிர்ச்சி.. சீன முன்னாள் துணை அதிபர் மீது #Metoo புகார் அளித்த டென்னிஸ் வீராங்கனை மாயம்..!!

பெங் சூயி எங்கே?

பெங் சூயி எங்கே?

டென்னிஸ் வீராங்கனை மாயமானது குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். பெங் சூயி எங்கே என்ற ஹேஷ்டேக் மூலம் அவர்கள் தங்களது கவலையை தெரிவித்தனர். ஆனால், இது குறித்து சீன அரசு கண்டுகொள்ளவே இல்லை

மிரட்டல்

மிரட்டல்

சீனாவின் இந்த அமைதி உலக நாடுகளை கோபமடைய செய்தது. இந்த நிலையில் பெங் சூயி குறித்து தகவலை வெளியிடவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவுக்கு தடை?

சீனாவுக்கு தடை?

இதனிடையே, இனி வரும் ஒலிம்பிக் போட்டியிலிருந்து சீனாவிற்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இல்லையெனில் சீனாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் ஏதும் நடைபெறாது என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீனாவுக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜோகோவிச் கவலை

ஜோகோவிச் கவலை

சீனாவில் நிலவும் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். பெங் சூயி நிலை குறித்து தாம் கவலை அடைவதாகவும், அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் ஜோகோவிச் கோரிக்கை விடுத்துள்ளார். அதே போன்று ஒசாகா, கிறிஸ் எவர்ட் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகளும் பெங் சூயி குறித்து கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சீனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IOC Star asks China about Peng shuai. Peng shuai has not been seen after her sexual complaint about former vice premier of china.
Story first published: Saturday, November 20, 2021, 17:34 [IST]
Other articles published on Nov 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X