For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாஸு.. இத்தோட 11 சட்டை.. சட்டுப்புட்டுன்னு முடிங்க..!

நியூயார்க்: நியூயார்க் நகரம் உறங்கும் போது.. இதெல்லாம் சினிமாவில் பாட்டு கேட்கும்போதும் பார்க்கும்போதுதான் கூலாக இருக்கும். இப்ப அந்த ஊருக்குப் போய்ப் பாருங்க.. சும்மா தீயாக கொளுத்துகிறது வெயில். ஜான் இஸ்னரிடம் கேட்டால் தெரியும் நியூயார்க் நகரம் தகிக்கும் விதத்தை.

செம வெயிலுக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது இந்த அழகிய நகரில். ஆண்கள் காலிறுதிப் போட்டியின்போது ஜான் இஸ்னர் மற்றும் ஜூவான் மார்ட்டின் டெல் பாட்ரோ இடையிலான மோதலின்போது இஸ்னர் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டார் வெயிலை சமாளிக்க முடியாமல்.

John Isner changes 11 shirts in US open 2018 match

வெயிலின் தாக்கத்தால் தடுமாறிய அவர் பல தவறுகளைச் செய்தார். இதனால் நீண்ட இழுபறியாக போனது போட்டி. கடைசியில் 6-7 (5/7), 6-3, 7-6 (7/4), 6-2 என்ற செட் கணக்கில் ஜூவான் மார்ட்டினிடம் தோல்வியுற்றார் இஸ்னர்.

இப்ப மேட்டர் இது இல்லை.. இஸ்னர் இந்தப் போட்டியின்போது மாற்றிய சட்டைகள்தான் விஷயமே. மொத்தம் 11 முறை சட்டையை மாற்றி விட்டார் இஸ்னர். தான் சட்டையை மாற்றியதே இஸ்னரே பெருமையுடன் கூறினார் என்பது கூடுதல் மேட்டர்!

கிட்டத்தட்ட 3 மணி நேரம் போட்டி நடைபெற்றது. போட்டி முழுவதுமே வெயிலை சமாளிக்க முடியாமல் வியர்வையில் நனைந்தபடி இருந்தார் இஸ்னர். அதேசமயம், அர்ஜென்டினாவின் ஜூவான் சற்றே சமாளித்து ஆடி வெற்றியை வசப்படுத்தினார்.

இஸ்னருக்கு வெயில் இந்த பாடுபடுத்த முக்கியக் காரணம் அவரது உடல் எடைதான். இதுகுறித்து இஸ்னர் கூறுகையில் நான் சற்று கூடுதல் வெயிட்டாக உள்ளதால், வெயிலை சமாளிப்பது கடினமாக உள்ளது. நிறைய எடையுடன் இருப்பதால் நிறைய வியர்வையும் வெளியேறுகிறது என்றார் சிரித்தபடி.

இத்தனைக்கும் இஸ்னர் அமெரிக்காக்காரர். சொந்த நாட்டு வெயிலையே இவரால் சமாளிக்க முடியவில்லை என்பதை கேட்கும்போது.. என்னவோ போங்கப்பா!

Story first published: Wednesday, September 5, 2018, 16:53 [IST]
Other articles published on Sep 5, 2018
English summary
US player John Isner changed 11 shirts in US open 2018 QF match against Juan Martin in the New York due to the heat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X