For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடடே.. அண்ணனுக்கு என்னா மூளை பாருங்க.. பெடரரையே ஓரம் கட்டிட்டாரே.. பயஸ் கலக்கல்!

டெல்லி: ரோஜர் பெடரர் ஒரு சவால் விட்டாலும் விட்டார்.. ஊரே மொத்தமாக கிளம்பி விட்டது. இதோ இப்போது நம்ம ஊர் லியாண்டர் பயஸும் தன் பங்குக்கு ஒரு அதிரடி சவாலை விட்டுள்ளார். இது இப்போது வைரலாகி விட்டது.

Recommended Video

BCCI giving their match videos to DD in lockdown time

ரோஜர் பெடரர் தனது வீட்டு வளாகத்தில் சுவரில் டென்னிஸ் பந்தை விடாமல் அடிக்கும் சவாலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது வைரலாகி பலரும் கலந்து கொண்டு வீடியோக்களை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது லியாண்டர் பயஸ் ஒரு அதிரடி சவாலை விடுத்துள்ளார். அதாவது சமையலில் பொறிக்கப் பயன்படுத்துவோமே அந்த பிரையிங் பேனை வைத்து டென்னிஸ் பாலை அடிக்கும் சவால்தான் அது. இதை தங்களது வீட்டுக்குள் செய்து வீடியோ அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

என்னாது 3 போட்டி நடத்தி வசூல் பண்ணலாமா.. சும்மா இருங்க அக்தர்.. ஷட்டப் செய்த கபில் தேவ்என்னாது 3 போட்டி நடத்தி வசூல் பண்ணலாமா.. சும்மா இருங்க அக்தர்.. ஷட்டப் செய்த கபில் தேவ்

பொறிக்கும் சட்டியுடன் சவால்

இது தொடர்பாக அவர் போட்டுள்ள போஸ்ட்டில், இங்கே உங்களுக்காக ஒரு அருமையான சவால். கிச்சனுக்கு போங்க. பிரையிங் பேனை எடுங்க. இப்படி என்னை மாதிரி பந்தை அடிங்க. வீடியோ அனுப்புங்க என்று அதிரடி சவால் விட்டுள்ளார் பயஸ். மேலும் அவர் கூறுகையில் நாமெல்லாம் லாக் டவுனில் இருக்கிறோம். எனவே இதை செய்யலாம் வாருங்கள் என்றும் டிவீட்டில் போட்டுள்ளார் அவர்.

 மகேஷ் பூபதிக்கு ஆச்சரியம்

மகேஷ் பூபதிக்கு ஆச்சரியம்

இவரது வீடியோவைப் பார்த்த முன்னாள் பார்ட்னரும், இன்னொரு டென்னிஸ் சாதனையாளருமான மகேஷ் பூபதி இதில் கமெண்ட் அடித்துள்ளார். மனுஷன் எது கிடைச்சாலும் வாலிதான் என்று கலாய்த்தபடி கருத்துப் பதிவிட்டுள்ளார் பூபதி. இந்தியாவில் தற்போது 21 நாள் லாக் டவுன் அமலில் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

 விளையாட்டு முடங்கியது

விளையாட்டு முடங்கியது

ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. உலகம் முழுவதும் டென்னிஸ் போட்டிகளும் நடைபெறவில்லை. விம்பிள்டன் ரத்தாகி விட்டது. பிரெஞ்சு ஓபன் போட்டியும் நடக்கவில்லை. அமெரிக்க ஓபன் போட்டியும் நடக்குமா என்பது சந்தேகம்தான். அதேபோல கால்பந்துப் போட்டிகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் வீரர்கள் இப்படி ஆளுக்கு ஒன்றை கையில் எடுத்து சவாலுக்கு கிளம்பி விட்டனர்.

 அடுத்து வடைச் சட்டி வருமா

அடுத்து வடைச் சட்டி வருமா

அடுத்து வடைச்சட்டியில் எப்படி கிரிக்கெட் ஆடுவது.. ஹாலுக்குள்ளேயே எப்படி டென்னிஸ் ஆடுவது என்று கிளம்பினாலும் கிளம்புவாங்க போல. ஆனால் இதுவும் கூட ரசிகர்களுக்கு தேவைதான். காரணம், சும்மா வெறுமனே பார்த்து படித்துக் கொண்டிருப்பதற்குப் பதில் இது போல ஏதாவது செய்து வீடியோ போட்டாலாவது கொஞ்சம் மாறுதலா இருக்குமே.. என்னங்க நீங்களும் சட்டியுடன் கிளம்பிட்டீங்களா.

Story first published: Thursday, April 9, 2020, 18:37 [IST]
Other articles published on Apr 9, 2020
English summary
Tenns ace Leander Paes has dared fasn with 'Frying Pan' challenge.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X