For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

17வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ... ஆனாலும் மைக் பிரையன் சோகம்!

விம்பிள்டன் இரட்டையரில் வென்றதன் மூலம், 17வது முறையாக பட்டம் வென்றார் அமெரிக்காவின் மைக் பிரையன்.

லண்டன்: விம்பிள்டன் போட்டியில் நேற்று நடந்த பைனலில் பட்டம் வென்றதன் மூலம் 17வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார் அமெரிக்காவின் மைக் பிரையன். ஆனால், தனது சகோதரன் இல்லாமல் முதல் முறையாக பட்டம் வென்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக் பிரையன், பாப் பிரையன் இரட்டையர்கள், டென்னிஸில் இரட்டையர் பிரிவில் கொடி கட்டி பறப்பவர்கள். 40 வயதாகும் பாப் பிரையன் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை.

Mike bryan wins 17th grand slam title

அதனால், அமெரிக்காவின் ஜேக் சாக்குடன் இணைந்து விம்பிள்டனில் விளையாடினார் மைக் பிரையன். நேற்று இரவு நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு பைனலில் தென்னாப்பிரிக்காவின் ராவன் கிளாசன், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை 6-3, 6-7, 6-3, 5-7, 7-5 என்ற செட்களில் மைக் பிரையன் ஜோடி வென்றது.

2003ல் துவங்கி, மைக் பிரையன் மற்றும் பாப் பிரையன் சகோதரர்கள் இதுவரை 16 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை, பிரெஞ்ச் ஓபனில் இரண்டு முறை, யுஎஸ் ஓபனில் 5 முறை, விம்பிள்டனில் மூன்று முறை என இருவரும் இணைந்து பட்டம் வென்றுள்ளனர்.

இதைத் தவிர ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று, கோல்டன் ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சகோதரர்கள் புரிந்துள்ளனர்.

தற்போது சகோதரன் பாப் பிரையன் இல்லாமல் ஆடவர் இரட்டையரில் பட்டம் வென்றுள்ளார் மைக் பிரையன். கலப்பு இரட்டையரிலும் மைக் பிரையன் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

இரட்டையர் பிரிவில் மிகவும் அதிக வயதில் பட்டம் வென்ற சாதனையும் சகோதரர்களுக்கு உண்டு.

Story first published: Sunday, July 15, 2018, 18:19 [IST]
Other articles published on Jul 15, 2018
English summary
Mike bryan wins title without brother for the first time.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X