For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரெஞ்ச் ஓபன் போட்டி அடுத்த வாரம் துவங்குகிறது... ஆனால் சாம்பியன் யார் என்பது முடிவாகிவிட்டது!

இதுவரை டென்னிஸ் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை நிகழ்த்தியது மட்டுமல்லாமல் அதனை முறியடிக்கவும் மீண்டும் பிரெஞ்ச் ஓபன் போட்டிக்கு நடால் தயாராகி வருகிறார்.

பாரிஸ்: புலிகளுக்கென்று சில குணம் உண்டு. அதில் மிரட்டலான விஷயம் என்னவெனில், தான் வாழும் பகுதியில் மற்றவர்கள் எட்டிக்கூடப் பார்த்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும். ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் ஒரு புலியைப் போன்றவர்தான்.

இருபது முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை வென்று, தன்னுடைய வயதில் பாதியில் இருக்கும் வீரர்களுக்கு இன்றும் சிம்மசொப்பனமாக விளங்கும் உலகின் தலைசிறந்த வீரரான ரோஜர் பெடரர் கூட, "நான் பிரெஞ்ச் ஓபன் தொடரில் பங்கேற்று ஒன்றும் ஆகப்போவதில்லை, அது நடாலின் கோட்டை.." எனத் தொடர்ந்து இரண்டாம் முறையாக களிமண் தரைகளில் நடைபெறும் சீசனிலிருந்து ஓய்வெடுத்துள்ளார்.

Nadal on a mission to defend french open

ஒரு துறையில் ஆதிக்கம் செலுத்தவேண்டுமெனில் நடாலைத் தான் உதாரணாமாக எடுத்துக்கொள்ள வேண்டும். டென்னிஸ் ஆடத் துவங்கிய சில வருடங்களிலேயே, மேற்கொண்டு டென்னிஸ் ஆடினால் கால் செயலிழந்து விடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தும் ஒவ்வொரு போட்டியிலும், தோல்விக்கு மிக அருகில் இருந்தால் கூட எதிராளி எளிதாக வென்றுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக அங்குமிங்கும் ஓடி ஓடி இறுதி வரை போராடுவதில் நடாலை விட வேறொருவரை மேற்கோள் காட்ட முடியாது.

தான் இதுவரை வென்ற 16 கிராண்ட் ஸ்லாம்களில் பத்தை பிரெஞ்சு ஓபெனில் வென்று சென்ற ஆண்டு சாதனை புரிந்தார் நடால். அத்தோடு நில்லாமல், யாருமே எதிர்பாராத விதத்தில் அமெரிக்க ஒப்பனையும் வென்றார். மீண்டும் தற்போது களி மண் தரைகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவ புறப்பட்டுவிட்டார்.

காயம் காரணமாக ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகிய நடால் தற்போது மீண்டும் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். போட்டித் துவங்க இன்னமும் ஐந்து நாட்கள் இருக்கிறது என்பதால் நடால் நிச்சயம் குணமடைந்து பதினோரவாது முறையாக பட்டம் வெல்வார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 16, 2018, 15:52 [IST]
Other articles published on May 16, 2018
English summary
Defending champion Rafael Nadal is expected to clinch his 11th grand slam in the french open.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X