அம்மாவும் நானும்... - செரினா வில்லியம்சை வம்புக்கிழுத்த இளம் வீராங்கனை

மெல்போர்ன் : ஜப்பானின் இளம் வீராங்கனை நவோமி ஒசாகா, தனது டிவிட்டர் பக்கத்தில் செரினாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நான் மற்றும் எனது அம்மா என்று பதிவிட்டு செரினாவை வம்புக்கிழுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீக்காக நிதி வசூல் செய்வதற்காக பிரபல டென்னிஸ் நட்சத்திரங்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

மெல்போர்னில் வரும் 20ம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், அந்நாட்டு காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் இந்த போட்டிக்கு ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

அவர் எவ்ளோ ரன் அடிச்சாலும் பரவாயில்லை.. டீம்ல இடம் கொடுக்க முடியாது.. கோலி ஷாக் முடிவு?

 சர்வதேச வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

சர்வதேச வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வரும் 20ம் தேதி முதல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அடுத்தமாதம் 2ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

புகைமண்டலமாக காணப்படும் மெல்போர்ன்

புகைமண்டலமாக காணப்படும் மெல்போர்ன்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவை ஆட்டிப்படைத்துவரும் காட்டுத்தீ காரணமாக அந்நாட்டின் மெல்போர்ன் உள்பட பல பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

நிக் கிர்கியோஸ் அழைப்பு

நிக் கிர்கியோஸ் அழைப்பு

ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீக்கு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். 2000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும்வகையில் டென்னிஸ் போட்டியை நடத்த அந்நாட்டின் டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

பெடரர், செரீனா பங்கேற்பு

பெடரர், செரீனா பங்கேற்பு

இன்று நடைபெறும் இந்த போட்டிகளில் பிரபல டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளான ரோஜர் பெடரர், நிக் கிர்கியோஸ், ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ், நவோமி ஒசாகா உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

செரீனாவை வெற்றிகொண்ட ஒசாகா

செரீனாவை வெற்றிகொண்ட ஒசாகா

கடந்த 2018 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தனிநபர் பிரிவில் உலக சாம்பியன் செரீனா வில்லியம்சை இளம் வீராங்கனை நவோமி ஒசாகா 6க்கு 2, 6க்கு 4 என்ற செட் கணக்குகளில் வெற்றி கொண்டார்.

'அம்மா' என உருக்கம்

இந்நிலையில், அந்த போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒசாகா, அம்மாவும் நானும் என்ற கேப்ஷனையும் போட்டு, செரீனாவை வம்பிழுத்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Naomi Osaka trolls Serena Williams in her twitter page
Story first published: Thursday, January 16, 2020, 14:05 [IST]
Other articles published on Jan 16, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X