For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அச்சுறுத்தலுக்கு இடையில் மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நோவக் ஜோகோவிச்சை வெற்றி கொள்வது மிகவும் கடினமான செயல் என்று முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் 16 முறை கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ள நோவக் ஜோகோவிச் தன்னுடைய பதக்கப்பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தை சேர்க்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ள போரிஸ் பெக்கர் அதற்கான வேகம் அவரது ஆட்டங்களில் வெளிப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஜோகோவிச்சின் முன்னாள் பயிற்சியாளரான போரிஸ் பெக்கர், அவர் குறித்து இந்த வார்த்தைகளை தெரிவித்துள்ளதன்மூலம் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகளில் ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடும் வீரர்களுக்கு அவர் எச்சரிக்கை அளித்துள்ளதாக கருதப்படுகிறது.

மெல்போர்னில் விறுவிறு

மெல்போர்னில் விறுவிறு

காட்டுத்தீ அச்சுறுத்தலுக்கு இடையிலும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 20ம் தேதி துவங்கி முக்கிய வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கிடையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2ம் தேதிவரை இந்த தொடர் நடைபெறவுள்ள நிலையில், கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை அறிய பல்வேறு தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

16 முறை வெற்றி பெற்ற ஜோகோவிச்

16 முறை வெற்றி பெற்ற ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் 16 முறை வெற்றி பெற்றுள்ள நோவக் ஜோகோவிச், தற்போது தனது பதக்கப்பட்டியலில் மேலும் ஒரு கிரீடத்தை சேர்க்கும் முனைப்புடன் ஆடி வருகிறார். இந்த ஆண்டிற்கான முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான இந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வெற்றி பெற முன்னணி டென்னிஸ் வீரர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், தான் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் எதிராக விளையாடும் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் ஜோகோவிச்.

முன்னாள் பயிற்சியாளர் ஆரூடம்

முன்னாள் பயிற்சியாளர் ஆரூடம்

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்துவது மிகவும் கடினம் என்று அவரின் முன்னாள் பயிற்சியாளரும் டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத சாதனையாளருமான போரிஸ் பெக்கர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜோகோவிச்சை எதிர்த்து களமிறங்கும் வீரர்களுக்கு அவர் எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்.

முதலிடத்தில் இடம்பிடிப்பு

முதலிடத்தில் இடம்பிடிப்பு

கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி இந்த ஆண்டின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் ஜோகோவிச். கடந்த ஆண்டில் தான் பங்கேற்ற 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மெல்போர்ன் மற்றும் விம்பிள்டன் என இரண்டு கிராண்ட் ஸ்லாம் பதக்கங்களை தன்னுடைய பதக்கப்பட்டியலில் சேர்த்திருந்தார் ஜோகோவிச். இதன்மூலம் ரோஜர் பெடரரின் சாதனையையும் முறியடித்திருந்தார்.

தொடர் வெற்றி பெற்ற ஜோகோவிச்

தொடர் வெற்றி பெற்ற ஜோகோவிச்

கடந்த 2011லிருந்து நடைபெற்ற 9 ஆஸ்திரேலிய ஓபன் தொடர்களில் 6 வெற்றிகளை பெற்றுள்ளார் நோவக் ஜோகோவிச். உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள இவர், கடந்த 2015 மற்றும் 2016ல் தொடர்ந்து இந்த கோப்பையை வென்றுள்ளார். இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் அரையிறுதியில் ரோஜர் பெடரரை எதிர்த்து விளையாட உள்ளார். இதையடுத்து ரபேல் நடாலையும் எதிர்கொள்ளவுள்ளார்.

Story first published: Tuesday, January 28, 2020, 19:21 [IST]
Other articles published on Jan 28, 2020
English summary
Novak Djokovic Is The Man To Beat At The Australian Open -Boris Becker
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X