For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமி.... உலக சாம்பியன்களின் மனிதாபிமானம்

சிட்னி : காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமிக்குமனிதாபிமான அடிப்படையில் நேரில் ஆறுதல் கூறிய டென்னிஸ் நட்சத்திரங்கள் ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் அனைவரது இதயங்களையும் கவர்ந்து அதில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளுக்காக மெல்போர்னில் சர்வதேச டென்னிஸ் வீரர்கள் முகாமிட்டு அங்கு கடந்த 20ம் தேதிமுதல் நடைபெற்று வரும் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டி வரும் 2ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவிய நிலையில் 20க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து வாடி வருகின்றனர். இதையடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுவது கேள்விக்குறியானது. ஆயினும் தொடர் துவங்கி நடையின்றி நடைபெற்று வருகிறது.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம்

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 20ம் தேதி துவங்கிய ஆண்டின் இந்த முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி தொடர்ந்து அடுத்த மாதம் 2ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் முன்னணி டென்னிஸ் வீரர்கள் மெல்போர்னில் குழுமியுள்ளனர். இந்த போட்டிகள் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது.

நன்கொடை டென்னிஸ் போட்டி

நன்கொடை டென்னிஸ் போட்டி

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால், அதில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து வாடி வருகின்றனர். இதை முன்னிட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் நன்கொடை வசூலிக்கும் நோக்கில் டென்னிஸ் போட்டி நடத்தினர். மேலும் பல டென்னிஸ் வீரர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.

டென்னிஸ் நட்சத்திரங்களின் மனிதாபிமானம்

டென்னிஸ் நட்சத்திரங்களின் மனிதாபிமானம்

இதனிடையே, காலில் காயமடைந்த சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்விஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் மற்றும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் அந்த சிறுமியின் கால்கட்டில் தங்களது கையெழுத்தையும் பதிவு செய்தனர். நோவக் ஜோகோவிச் ஒருபடி மேலே சென்று அந்த சிறுமியின் கால்கட்டில் வாத்தின் ஓவியத்தை வரைந்து சிறுமியை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்.

பெடரர் வீடியோவில் பதிவு

முன்னதாக ரபேல் நடாலும் அந்த சிறுமியை சந்தித்து ஆறுதல் தெரிவித்து பின்பு சிறுமியின் கால்கட்டில் கையெழுத்திட்டுள்ளார். ரோஜர் பெடரர் கையெழுத்திட்ட வீடியோவில் தான் பெடரருக்கு அடுத்தபடியாக கையெழுத்திடுவதாக தெரிவித்துள்ளார். பெடரரின் வீடியோ வெளியிடப்படவில்லை. உலக சாம்பியன்களான ரோஜர் பெடரர் உள்ளிட்ட வீரர்கள் தனக்கு ஆறுதல் தெரிவித்தது அந்த சிறுமியின் முகத்தில் சந்தோஷமாக வெளிப்பட்டது.

இடைப்பட்ட நேரத்தில் மனிதாபிமானம்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் இந்த வீரர்கள் பிசியாக இருந்தபோதிலும் தங்களுக்கு கிடைத்த இடைப்பட்ட நேரத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டது அவர்களது ரசிகர்களை மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ரசிகர்களின் மனதில் அவர்களுக்கான இடம் மேலும் உயர்ந்தது. வீரர்களின் இந்த செயலை வீடியோ எடுத்து ஏடிபி டூர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தனித்தனியாக பதிவிட்டுள்ளது.

அடுத்தடுத்த போட்டிகளில் பிசியான வீரர்கள்

அடுத்தடுத்த போட்டிகளில் பிசியான வீரர்கள்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் அமெரிக்க வீரர் டென்னிஸ் சாண்ட்கிரென்னை எதிர்த்து போட்டியிடுகிறார். இதேபோல நோவக் ஜோகோவிச் கனடா நாட்டை சேர்ந்த மிலோஸ் ரவோனிக்கை எதிர்கொண்டு விளையாடுகிறார்.

Story first published: Tuesday, January 28, 2020, 15:46 [IST]
Other articles published on Jan 28, 2020
English summary
Roger Federer, Novak Djokovic's Adorable Gesture For Young Girl
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X