For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பானிய பெண் ஒசாகா சாதனை.. செரீனாவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார்

நியூயார்க் : அமெரிக்க ஓபன் இறுதியில், முதன் முறையாக ஜப்பான் சார்பாக டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிக்கு முன்னேறிய நவோமி ஒசாகா, வெற்றி பெற்று இருக்கிறார்.

இதன் மூலம், முதல் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு இருபது வயது தான் ஆகிறது.

இந்த கிராண்ட்ஸ்லாம் இறுதியில், செரீனா வில்லியம்ஸ், நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது இரண்டாம் செட் முழுவதும் தொடர்ந்தது. அதற்கு நடுவே, ஒசாகா கவனத்தை சிதற விடாமல், தெளிவாக ஆடி வெற்றி பெற்றுள்ளார்.

லட்சிய டென்னிஸ் வீரரோடு இறுதி

நவோமி ஒசாகாவின் லட்சிய டென்னிஸ் வீரர் செரீனா வில்லியம்ஸ் தான். அவருடன் ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதியில் ஆடுவது என்பது என் கனவு. அவரை நான் மிகவும் விரும்புகிறேன் என கூறி இருந்தார் ஒசாகா. ஜப்பான் சார்பாக முதல் முறையாக ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் இறுதியில் ஆடும் பெண் என்பதால் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

லட்சிய டென்னிஸ் வீரரோடு இறுதி

லட்சிய டென்னிஸ் வீரரோடு இறுதி

நவோமி ஒசாகாவின் லட்சிய டென்னிஸ் வீரர் செரீனா வில்லியம்ஸ் தான். அவருடன் ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதியில் ஆடுவது என்பது என் கனவு. அவரை நான் மிகவும் விரும்புகிறேன் என கூறி இருந்தார் ஒசாகா. ஜப்பான் சார்பாக முதல் முறையாக ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் இறுதியில் ஆடும் பெண் என்பதால் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

சர்ச்சைகள் நிறைந்த இரண்டாம் செட்

சர்ச்சைகள் நிறைந்த இரண்டாம் செட்

இரண்டாம் செட் துவக்கத்தில் ஒசாகா 1-0 என முன்னிலையில் இருந்தார். அப்போது செரீனாவுக்கு பார்வையாளர் பகுதியில் இருந்து அறிவுரை பெற்றதாக கூறி நடுவர் ஒரு புள்ளி பெனால்டி விதித்தார். அங்கே இருந்து பிரச்சனை துவங்கியது. அடுத்து கோபத்தோடு ஆடிய செரீனா 3-1 என வேகமாக ஆட்டத்தில் முன்னேறினார். அடுத்து, நடுவர் செரீனா கோபம் வந்து டென்னிஸ் ராக்கெட்டை கீழே வீசியதற்கு பெனால்டி புள்ளிகள் கொடுக்க, பெரும் பிரச்சனை ஆனது போட்டி.

கலவரத்துக்கு நடுவே வென்ற ஒசாகா

கலவரத்துக்கு நடுவே வென்ற ஒசாகா

இத்தனை கலவரங்களுக்கு மத்தியில், இறுதி வரை செரீனா நடுவரோடு சண்டை போட்டுக் கொண்டே இருந்த சூழ்நிலையிலும், இளம் நவோமி ஒசாகா 6-4 என இரண்டாம் செட்டை கைப்பற்றினார். இதில் ஒரு கேம் செரீனாவுக்கு விதிக்கப்பட்ட பெனால்டி ஆகும்.

ஒசாகாவை கொண்டாடும் ட்விட்டர்

சாதனை வெற்றி பெற்ற ஒசாகாவை ட்விட்டர் கொண்டாடி வருகிறது. டென்னிஸ் ரசிகர்கள், ஜப்பானியர்கள் என ஒசாகாவை பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக செரீனா நடுவரோடு நடத்திய வார்த்தைப் போருக்கு இடையே மனம் தளராமல் வெற்றி பெற்றுள்ளார் ஒசாகா. வெற்றி பெற்ற பின் தன் தாயோடு கண்ணீர் மல்க வெற்றியை கொண்டாடினார்.

Story first published: Sunday, September 9, 2018, 11:15 [IST]
Other articles published on Sep 9, 2018
English summary
Osaka beat Serena williams to become first Japanese singles grandslam winnerOsaka beat Serena williams to become first Japanese singles grandslam winner.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X