For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

13.5 லட்சம் மக்களுக்காக.. அவங்களுக்கு நாம திருப்பி செலுத்த வேண்டிய நேரம் இது.. நெகிழ வைத்த நடால்!

மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 57,000க்கும் மேற்பட்டோருக்கு அங்கே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கே நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார் பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால்.
சுமார் 90.72 கோடி அளவுக்கு நிதி திரட்ட அவர் முயன்று வருகிறார். அதற்காக விளையாட்டு வீரர்களின் ஆதரவை அவர் கோரி இருக்கிறார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இத்தாலி, ஸ்பெயின் நிலை

இத்தாலி, ஸ்பெயின் நிலை

எனினும், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து விட்டது. அந்த வகையில் பார்த்தால் இத்தாலி இரண்டாம் இடத்திலும், ஸ்பெயின் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அமெரிக்கா மற்றும் இத்தாலியில் 80,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரம்

தீவிரம்

ஸ்பெயினில் 57,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர். 4,300க்கும் மேற்பட்டோர் அங்கே மட்டும் கொரோனா வைரஸ்-க்கு பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களில் அங்கே அந்த நோயின் தீவிரம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது அந்த நாடு.

ரபேல் நடால் உதவி

ரபேல் நடால் உதவி

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தன் நாட்டுக்கு உதவ முயன்று வருகிறார். அங்கே ரெட் கிராஸ் அமைப்பு கொரோனா வைரஸ் பாதிக்கும் வாய்ப்பு உள்ள குடும்பங்களுக்கு உதவி வருகிறது.

11 மில்லியன் யூரோ

11 மில்லியன் யூரோ

அந்த அமைப்பு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அளித்து வருகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டி வருகிறார் ரபேல் நடால். 11 மில்லியன் யூரோ பணம் திரட்ட அவர் முடிவு செய்துள்ளார். அது குறித்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கோரிக்கை

கோரிக்கை

கூடைப்பந்து வீரர் பா கோசலுடன் இணைந்து இந்த முயற்சியை அவர் எடுத்துள்ளார். இதன் நோக்கம் ஸ்பெயின் நாட்டு விளையாட்டு வீரர்களிடம் அந்த 11 மில்லியன் யூரோக்களை திரட்ட உள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் விளையாட்டு வீரர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்களின் ஆதரவு

"நாங்கள் இப்போது விளையாட்டு வீரர்களாக இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் உங்களின் ஆதரவு தான். இப்போது விளையாட்டு வீரர்கள் உங்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டிய தருணம்" என மக்களுக்கு உதவ வேண்டிய அவசியம் பற்றி பேசினார்.

முடிவுக்கு வந்துள்ளோம்

முடிவுக்கு வந்துள்ளோம்

பின்னர், "நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். இதை செய்ய இதுதான் சரியான நேரம். அனைத்து ஸ்பெயின் நாட்டு வீரர்களும் ஒன்றிணைவார்கள் என நம்புகிறோம். ரெட் கிராஸ் ரெஸ்பாண்டே அமைப்புடன் இணைந்து நல்ல உதாரணமாக இருப்போம்" என்றார்.

ஆதரவு தேவை

"சுமார் 13 லட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கு உதவ சுமார் 11 மில்லியன் யூரோஸ் (90.7 கோடி) திரட்ட இருக்கிறோம். பா மற்றும் நான் ஏற்கனவே நிதி அளித்து விட்டோம். இந்த திட்டம் வெற்றி பெற உங்களையும் நாங்கள் நம்புகிறோம்" என மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ரபேல் நடால்.

Story first published: Friday, March 27, 2020, 17:13 [IST]
Other articles published on Mar 27, 2020
English summary
Rafael Nadal asks for donations from athletes to fight coronavirus outbreak
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X