For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 மணி நேரம் 25 நிமிட போராட்டம்… ஜோகோவிச்சை வீழ்த்தி ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியனானார் நடால்

ரோம்:இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் பிரிவில் நடாலும், பெண்கள் பிரிவில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

பிரெஞ்ச் ஓபன் போட்டிகளுக்கு முன்னோட்டமாக இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 2ம் நிலை வீரர் ரபெல் நடாலும் பலப்பரீட்சை நடத்தினர்.

Rafael nadal beats novak djokovic to win 9th rome masters tennis

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9வது முறையாக பட்டத்தை தன் வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் பட்டத்தை நடால் வெல்வது இது 34வது முறையாகும்.

இந்த வாரம் இவங்க உலக சாம்பியன்..! அடுத்த வாரம் யாரோ? மாத்தி, மாத்தி சொல்லும் கம்பீர் இந்த வாரம் இவங்க உலக சாம்பியன்..! அடுத்த வாரம் யாரோ? மாத்தி, மாத்தி சொல்லும் கம்பீர்

பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) தோற்கடித்து வாகை சூடினார். 1978ம் ஆண்டுக்கு பிறகு செக் குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை உச்சி முகர்வது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13-வது சர்வதேச பட்டமாக இதுவாகும்.

Story first published: Monday, May 20, 2019, 15:45 [IST]
Other articles published on May 20, 2019
English summary
Rafael Nadal beats Novak Djokovic to win ninth Rome Masters.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X