For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையும் தலையும் பேசினால் லாக்டவுன் என்று அர்த்தம்

லண்டன் : போட்டிகளில் பங்கேற்காமல் பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது விரக்தியாக உள்ளதாக பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Cricketers who never got the credit they deserved

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ரபேல், ரோஜர் பெடரர் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் உரையாடி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, ரபேலுடன் உரையாடிய ரோஜர் பெடரர், இந்த லாக்டவுன் தனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும், இதன்மூலம் தன்னுடைய முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் ஆறுவதற்கு கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்.. குட்டைப் பாவாடையில் ஆண்டி.. செம காமெடிமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்.. குட்டைப் பாவாடையில் ஆண்டி.. செம காமெடி

சர்வதேச அளவில் லாக்-டவுன்

சர்வதேச அளவில் லாக்-டவுன்

கொரோனா வைரஸ் பீதி சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்பில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் லாக்-டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

ரபேல் நடால் நேரலையில் பேச்சு

ரபேல் நடால் நேரலையில் பேச்சு

இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் வீரர்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. விம்பிள்டன் போட்டிகளில் இருமுறை கோப்பையை வென்றுள்ள ரபேல் நடால், இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் நேலையில் உரையாடி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நடால் பேச்சு

நடால் பேச்சு

டென்னிஸ் விளையாடாமல் இருப்பது தனக்கு எவ்வாறு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து இந்த நேரலையில், ரபேல் நடால் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தன்னுடைய வீட்டில் டென்னிஸ் கோர்ட்டும் இல்லாத நிலையில், வெறுமனே பிட்னஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு வருவதும் தனக்கு மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

கடந்த 15 ஆண்டுகளாக தானும், ரோஜர் மற்றும் முர்ரே ஆகியோரும் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்தாலும், இந்த லாக்டவுன் காலத்தில்தான் தாங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தன்னுடைய பேச்சின் இடையில் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடி காலத்தில் அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கூறியுள்ளார்.

ரோஜர் பெடரர் மகிழ்ச்சி

ரோஜர் பெடரர் மகிழ்ச்சி

இதனிடையே, தன்னுடைய கால் மூட்டில் ஏற்பட்டுள்ள காயம் ஆறுவதற்கான கால அவகாசம் தற்போது கிடைத்துள்ளதாகவும், இதனால் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் ரோஜர் பெடரர் கூறியுள்ளார். தான் விளையாடுவதற்கு எவ்வளவு காலம் ஆனாலும், தற்போது கிடைத்துள்ள இந்த இடைவெளி தனது காயம் ஆறுவதற்கான காலம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 21, 2020, 12:37 [IST]
Other articles published on Apr 21, 2020
English summary
Nadal spoke to both Roger Federer and Andy Murray in an Instagram Live
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X