For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விம்பிள்டன் டென்னிஸ் நடால் விலகல்.. வினோத நோயால் அவதிப்படும் நடால்.. ரசிகர்கள் அதிர்ச்சி

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் இருந்து ரஃபேல் நடால் விலகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடால் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியாஸை எதிர்கொள்ள இருந்தார். அப்போது காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார்.

 “ஐயோ.. அந்த 4 பேரு பயங்கரம் ஆச்சே” இங்கி, டெஸ்டில் இந்தியாவுக்கு இருக்கும் ஆபத்து.. தப்பிக்குமா?? “ஐயோ.. அந்த 4 பேரு பயங்கரம் ஆச்சே” இங்கி, டெஸ்டில் இந்தியாவுக்கு இருக்கும் ஆபத்து.. தப்பிக்குமா??

இதனையடுத்து, இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக நிக் கிர்கியாஸ் தகுதி பெற்றுள்ளார். அரையிறுதி தொடரின் 2 ஆட்டத்தில் ஜோகோவிச், கேமரான் நொரியை எதிர்கொள்ள உள்ளார்.

நடாலின் போராட்டம்

நடாலின் போராட்டம்

இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது. ரஃபேல் நடாலை பொறுத்தவரை காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டைலர் ஃபிரிட்சை எதர்கொண்ட போதே நடால் காயத்தால் அவதிப்பட்டார். அப்போது போட்டியின் போதே சிகிச்சை எடுத்து கொண்ட நடால், கடும் போராட்டம் நடத்தி, 4 மணிநேரம் 16 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார்.

வேதனையாக உள்ளது

வேதனையாக உள்ளது

இதனையடுத்து, அரையிறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில் நடால் பயிற்சி மேற்கொண்டார். அப்போது நடாலுக்கு வலி மேலும் அதிகமானதால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடால், விம்பிள்டன் தொடரில் முக்கிய கட்டத்தில் காயம் காரணமாக விலகுவது வேதனையாக இருப்பதாக தெரிவித்தார்.

மகிழ்ச்சி தான் முக்கியம்

மகிழ்ச்சி தான் முக்கியம்

தாம் பல முறை காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடி இருக்கிறேன். ஆனால் இம்முறை காயத்தின் தன்மை அதிமாகிவிட்டது. என்னால் தொடர்ந்து 2 போட்டியில் விளையாட முடியாது என்று எனக்கு தெரியும். முழு உடல் தகுதி இல்லாமல் களத்துக்கு சென்று போட்டியிட எனக்கு மனம் வரவில்லை. எனக்கு சாம்பியன் பட்டங்களை விட மகிழ்ச்சியாக இருப்பது தான் முக்கியம்.

வினோத நோய்

வினோத நோய்

இந்த 2 போட்டிக்காக, 3 மாதம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்காமல் இருக்க முடியாது. ரஃபேல் நடாலுக்கு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் போது காலில் ஒரு விதமான வலி ஏற்பட்டுள்ளது. நடால் மியூல்லர், வெயிஸ் சிண்ட்ரோம் என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். பாதத்தில் இருக்கும் எலும்பில் வலி ஏற்படுவதற்கு நடால் சிகிச்சை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 8, 2022, 17:15 [IST]
Other articles published on Jul 8, 2022
English summary
Rafael Nadal ruled out from Wimbledon 2022 – affected by syndrome விம்பிள்டன் டென்னிஸ் நடால் விலகல்.. வினோத நோயால் அவதிப்படும் நடால்.. ரசிகர்கள் அதிர்ச்சி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X