For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோற்றாலும், ஜெயித்தாலும் "மீசைய முறுக்கு".. தோல்வியை ஒப்புக் கொண்ட நடால்.. உருக வச்சுட்டார்

பிரான்ஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், தனது தோல்வியை மனம் திறந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் கிரேட் நடால். அவரது சில உருக்கமான வார்த்தைகள் ரசிகர்களை சபாஷ் போட வைத்திருக்கிறது.

பாரீஸில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கிளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர்.1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் மோதினர்.

4 மணி நேரம்.. அசராமல் அடித்த ஜோகோவிச்.. சரண்டரான களிமண் டென்னிஸ் 4 மணி நேரம்.. அசராமல் அடித்த ஜோகோவிச்.. சரண்டரான களிமண் டென்னிஸ்

உலகின் முதல் நிலை வீரர்கள் மோதியதால், இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி, களிமண் தரை ஆட்டங்களில், யாரும் வீழ்த்த முடியா ஆளுமை நடாலை எதிர்த்தது, ஜோகோவிச் ஆடியதால் இப்போட்டிக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

சுதாரித்த ஜோகோவிச்

சுதாரித்த ஜோகோவிச்

இதில், முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை வகித்தார். அதன்பிறகு சுதாரித்து ஆடிய ஜோகோவிச், இரண்டாவது சுற்றை 6-3 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன்மூலம் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 4 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

அசுரத்தனம்

அசுரத்தனம்

முதல் செட்டில், நடால் முன்னிலைப் பெற்றதால், அவரே ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியே யூ-டர்ன் அடித்த ஜோகோவிச், அடுத்த மூன்று செட்களையும் 6-3, 7-6, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓப்பன் வரலாற்றில் 108 போட்டிகளில் விளையாடியிருக்கும் நடாலின் மூன்றாவது தோல்வி இது. 105 போட்டிகளில் வெற்றிபெற்று அசைக்க முடியா கிங்காக வலம் வந்த நடாலை, ஜோகோவிச் வீழ்த்தியது உண்மையில் அசுரத்தனம் எனலாம்.

சாதகமான சூழல்

சாதகமான சூழல்

போட்டி முடிந்த பிறகு பிரஸ் மீட்டில் பேசிய நடால், "போட்டி நடைபெற்ற போது, கண்டிஷன்ஸ் சற்று மெதுவாக இருந்தன என்பது உண்மைதான். நாங்கள் மிகவும் வெப்பமான வானிலையில் விளையாடுகிறோம். பந்துகள் அதிகம் பவுன்ஸ் ஆகும். அதேசமயம், இரவின் போது கண்டிஷன்ஸ் வேறு மாதிரி இருக்கும் அல்லவா. எனவே பந்து கொஞ்சம் குறைவாக பவுன்ஸ் ஆனது. இது அவருக்கு சாதகமான சூழலாகும்.

நான் போராடினேன்

நான் போராடினேன்

எனினும், இது ஒரு பொருட்டே அல்ல. இது டென்னிஸ் போட்டி. விளையாடும் போது நிலவும் கண்டிஷன்களை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வீரர் வெற்றிபெற தகுதியானவர். எனவே ஜோகோவிச் வெற்றி பெற தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை. சில நேரங்களில் நீங்கள் வெல்வீர்கள், சில நேரங்களில் நீங்கள் தோற்பீர்கள். எனினும் நான் எனது சிறந்த ஆட்டத்தை கொடுக்க முயற்சித்தேன். அநேகமாக இந்த நாள் எனக்கு சிறந்தது அல்ல. நான் போராடினேன். நிறைய முயற்சி செய்தேன். ஆனால், இரவில் எனது ஷாட்ஸ்களின் பொசிஷன் சிறப்பானதாக அமையவில்லை.

இது என் நாள் அல்ல

இது என் நாள் அல்ல

தவறுகள் நடக்கலாம். ஆனால் நீங்கள் வெல்ல விரும்பினால், நீங்கள் தவறுகளை செய்யக் கூடாது. எனவே இனி இதைப்பற்றி பேச ஒன்றுமில்லை. ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இது ஒரு நல்ல மோதலாக இருந்தது. நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், இந்த நாள் என்னுடையது அல்ல" என்று தோல்வியை நடால் ஏற்றுக் கொண்டார்.

Story first published: Saturday, June 12, 2021, 20:31 [IST]
Other articles published on Jun 12, 2021
English summary
Rafael Nadal summarises his match vs Novak Djokovic - நடால்Rafael Nadal summarises his match vs Novak Djokovic - நடால்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X