For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீடுகளிலிருந்தபடி பாட்டுக் கச்சேரி.. ஆன்லைனில் சேர்ந்த ரூ 66.68 லட்சம்.. ஒரு அசத்தல் நிதி சேகரிப்பு!

மாட்ரிட்: ஸ்பெயின் நாடு கொரோனா வைரஸிடம் சிக்கி பெரும் பேரிழிவை சந்தித்து வரும் நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஸ்டார் ரஃபேல் நடால் கூடைப்பந்தாட்ட வீரர் பா கசோல் மற்றும் இசையமைப்பாளர்கள் பலர் இணைந்து ஆன்லைன் மூலமாக கச்சேரி நடத்தி ரூ. 66,68,370 நிதி திரட்டியுள்ளனர்.

இதுதொடர்பான ஒரு நிதி சேகரிப்பு திட்டத்தை இந்த வாரம் அவர்கள் தொடங்கியிருந்தனர். செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக இந்த உதவி செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் சுகாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அதற்குத் தேவையான உதவிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

நடால் உள்ளிட்ட வீரர்கள், பல்வேறு இசையமைப்பாளர்கள் இணைந்து உலக அளவில் இந்த நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். ஆன்லைன் மூலமாக இது சேகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக 6.90 லட்சம் டாலர் (இந்திய மதிப்புப்படி ரூ. 66,68,370) நிதி சேர்ந்துள்ளதாம். கொரோனாவைரஸ் ஒழிப்பு தேவைகளுக்காக இது பயன்படுத்தப்பட உள்ளது.

அன்டர் -17 கால்பந்து உலக கோப்பை விளையாடறது ரொம்ப கஷ்டம் -உதவி பயிற்சியாளர் கவலைஅன்டர் -17 கால்பந்து உலக கோப்பை விளையாடறது ரொம்ப கஷ்டம் -உதவி பயிற்சியாளர் கவலை

கால்பந்து வீரரர்கள் இணைந்து

கால்பந்து வீரரர்கள் இணைந்து

பார்சிலோனாவைச் சேர்ந்த ஜெரார்ட் பிக், ரியல் மாட்ரிட் வீரர் செர்ஜியோ ரமோஸ், டென்னிஸ் ஸ்டார் நடால் போன்றோர் இதில் முக்கியமானவர்கள். தங்களது ரசிகர்கள் மூலமும், பொதுமக்கள் மூலமும் இந்த நிதி சேகரிப்பை இவர்கள் முடுக்கி விட்டுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் முடங்கியிருப்போருக்குத் தேவையானதைச் செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

சீன பியானோ கலைஞரும் இணைந்தார்

சீன பியானோ கலைஞரும் இணைந்தார்

பிரபல பாடகர்கள் அயிட்டானா, அலெஜான்ட்ரோ சான்ஸ், பெரெட், லூயிஸ் பான்சி, நடிகை டேனா பாவோலா, இசை பேன்ட் நடத்தி வரும் மோராத் அன்ட் டாபுரேட், சீனாவைச் சேர்ந்த பியானோ கலைஞர் லாங் லாங் ஆகியோரும் இந்த நிதியுதவி அளித்தோரில் இடம் பெறுவர். இதுகுறித்து பிக் கூறுகையில், இது மிகவும் நெருக்கடியான கட்டம். அனைவரும் கஷ்டப்படுவோருக்குக் கை கொடுப்போம். இது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

வீட்டிலிருந்தபடியே கச்சேரி

வீட்டிலிருந்தபடியே கச்சேரி

இதில் விசேஷம் என்னவென்றால் இதில் கலந்து கொண்டுள்ள இசையமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களது வீடுகளிலிருந்தபடி கச்சேரி நடத்தினர். 4 மணி நேரம் இந்த கச்சேரி நடந்தது. மொத்தம் 180 நாடுகளில் இது ஆன்லைன் மூலமாக லைவ் செய்யப்பட்டது. யூடியூப் மற்றும் பேஸ்புக் மூலமாக இதை லைவ் செய்துள்ளனர். உலகத்தில் இதுபோல ஒரு நிதி சேகரிப்பு கச்சேரி இதுவரை நடந்துள்ளதா என்று தெரியவில்லை.

ஸ்பெயினில் மிகப் பெரிய பாதிப்பு

ஸ்பெயினில் மிகப் பெரிய பாதிப்பு

இந்த நிகழ்ச்சியில் 20 முதல் நிலை டிவிஷன் கிளப்களைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் கலந்து கொண்டனர். அதேபோல ஸ்பெயன் நீச்சல் வீரர் மிரியா பெல்மான்டி போன்றோரும் கலந்து கொண்டனர். ஸ்பெயின் நாடு தற்போது கொரோனாவைரஸிடம் சிக்கி பெரும் சீரழிவை சந்தித்து வருகிறது. இதுவரை 6000 பேர் வரை அங்கு உயிரிழந்துள்ளனர். 72,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயின்தான் அதிகம் பேரை பலி கொடுத்துள்ளது.

Story first published: Sunday, March 29, 2020, 19:38 [IST]
Other articles published on Mar 29, 2020
English summary
Tennis star Rafale Nadal and others have raised Rs.66 lakhs to Fight Coronavirus in Spain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X