For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சும்மா பொய் செய்திய போட்டு திரியாதீங்க.. போபண்ணா பஞ்சாயத்து பற்றி லியாண்டர் பயஸ்

By Veera Kumar

ரியோ டி ஜெனிரோ: ரோஹன் போபண்ணாவுடன் தனக்கு எந்த பஞ்சாயத்தும் இல்லை என்றும், ஒலிம்பிக் கிராமத்தில்தான் தங்கியுள்ளதாகவும், தெளிவுபடுத்தியுள்ளார் லியாண்டர் பயஸ்.

ஒலிம்பிக் அணியில் இந்தியாவுக்கான ஆடவர் இரட்டையர் டென்னிசில் ஆட லியாண்டர் பயஸ் மற்றும் ரோஹன் போபண்ணா இருவரையும் கைகோர்த்துவிட்டபோதே பஞ்சாயத்து ஆரம்பித்தது.

லியாண்டருடன் ஜோடி சேர்ந்து ஆட முடியாது என்று ரோஹன் போபண்ணா மறுக்க, அவர்தான் வேண்டும் என்று லியாண்டர் கெஞ்ச பெரும் பிரச்சினையானது. இந்த விவகாரத்தில் இந்திய டென்னிஸ் சம்மேளளனம் தலையிட்டு போபண்ணாவை வற்புறுத்தி லியாண்டருடன் இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாட சம்மதிக்க வைத்தது.

தங்க முடியாது

தங்க முடியாது

இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் வைத்து புதிய பஞ்சாயத்து வெடித்ததாக செய்திகள் வெளியாகின. அங்கு லியாண்டரும், போபண்ணாவும் ஒரே இடத்தில் தங்குமாறு கூறப்பட்டுள்ளனர். ஆனால் அதை லியாண்டர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. போபண்ணாவுடன் சேர்ந்து தங்க முடியாது என்று அவர் கூறியதாக தெரிகிறது.

அறை இல்லை

அறை இல்லை

இதனால் லியாண்டருக்கு அறை ஒதுக்கப்படவில்லை. வேறு எந்த அறையும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பயஸ் விளக்கம்

இதுகுறித்து லியாண்டர் பயஸ் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: நான் போபண்ணாவுடன் தங்க மாட்டேன் என்று சொன்ன செய்தி பொய்யானது. எங்களை டென்னிஸ் போட்டிக்கு ஆயத்தமாவதை தடுக்கும் செயல்.

நிறுத்தனும்

நிறுத்தனும்

நான் இப்போது ஒலிம்பிக் கிராமத்தில்தான் தங்கியுள்ளேன். எனவே செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட செய்திகளை இனிமேலாவது குறிப்பிட்ட மீடியாக்கள் நிறுத்த வேண்டும்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

நாட்டுக்காக முடிந்த அளவு சிறப்பாக ஆட தயாராகிவரும் எங்களுக்கு இதுபோன்ற செய்திகளால் கவன சிதறல் செய்ய வேண்டாம். இந்தியா சார்பில் பங்கேற்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், இந்த நேரத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Story first published: Saturday, August 6, 2016, 16:52 [IST]
Other articles published on Aug 6, 2016
English summary
Leander Paes has termed reports that he had refused to share a room at the Olympic Games Village here with his doubles partner Rohan Bopanna as "false"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X