For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புருஷன் பொண்டாட்டின்னா இப்படி இருக்கணும்.. கொரோனாவைரஸ் .. நிதியை அள்ளிக் கொடுத்த பெடரர்!

ஜெனீவா: கொரோனாவைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்காக டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரரும், அவரது மனைவியும் 1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 7.58 கோடி நிதியுதவியை அளித்துள்ளனர்.

Recommended Video

Unique records that MS Dhoni has in the IPL

இந்த பெருந்தன்மை யாருக்கு வரும்.. கோவிட் -19 எனப்படும் கொரோனாவைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ளது. விளையாட்டு உலகமும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் ரோஜர் பெடரர் தம்பதியின் தாராள மனசு வெளிப்பட்டுள்ளது.

பெடரர் தம்பதியின் உதவி

பெடரர் தம்பதியின் உதவி

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் பெடரரும், அவரது மனைவி மிர்காவும் இணைந்து இந்த நிதியுதவியை அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக இந்த நிதியுதவியை அறிவித்துள்ளனர். விளையாட்டு உலகிலிருந்து வெளி வந்துள்ள மிகப் பெரிய நிதியுதவி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் பெடரர் தம்பதியை பாராட்டியுள்ளனர்.

டிவிட்டர் மூலம் அறிவித்த பெடரர்

டிவிட்டர் மூலம் அறிவித்த பெடரர்

இதுதொடர்பாக டிவிட்டரில் ஒரு செய்தியைப் போட்டுள்ளார் பெடரர். அதில், இது மிகவும் சோதனைக்காலம். அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளோம். யாரும் இதிலிருந்து தப்ப முடியாது. மிர்காவும், நானும் தனிப்பட்ட முறையில் சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ இந்த நிதியுதவியை அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இது ஒரு தொடக்கம்தான்

இது ஒரு தொடக்கம்தான்

எங்களது இந்த பங்களிப்பு ஒரு தொடக்கம்தான். பலரும் இதில் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்பது எங்களது விருப்பம். அனைவரும் இணைந்து இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவோம். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என்று கூறியுள்ளார் பெடரர். பெடரர் சமீபத்தில்தான் முழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இதனால் இந்த மே மாதம் நடைபெறவிருந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

மிரட்டி வரும் கொரோனா

மிரட்டி வரும் கொரோனா

ஆனால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது கொரோனா மிரட்டல் காரணமாக செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளது. கொரோனாவைரஸ் சுவிட்சர்லாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு தற்போது 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. தொடர்ந்து தீவிர பரிசோதனைகளை சுவிஸ் அரசு முடுக்கி விட்டு வருகிறது.

Story first published: Thursday, March 26, 2020, 11:51 [IST]
Other articles published on Mar 26, 2020
English summary
Roger Federer & his wife to donates Rs.7.5 Cr to Coronavirus outbreak
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X