For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாலே ஓபன் இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி - முதல் ரேங்கையும் இழக்கிறார்

By Aravinthan R

ஹாலே, ஜெர்மனி: ஹாலே ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இதனால், தன் முதல் ரேங்க்கை ரபேல் நடாலிடம் மீண்டும் இழந்துள்ளார்.

தற்போது 34வது ரேங்க்கில் இருக்கும் க்ரோஷிய வீரரான போர்னா கோரிக்குக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் பெடரர் எளிதாக வெல்வார் என கருதப்பட்டது.

இந்நிலையில், எதிர்பாராத வகையில் பெடரர் தோல்வி அடைந்துள்ளார். தொடர்ந்து, தன் சாதனைகளை தானே முறியடித்து வந்த பெடரரின் வெற்றிப் பயணத்தில், சிறிய சறுக்கலாக இந்த இறுதிப் போட்டி தோல்வி அமைந்துள்ளது.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

இறுதிப் போட்டியில், பெடரர் முதல் செட்டை போராடி இழந்தார். கோரிக் சில தவறுகள் செய்ய, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பெடரர் இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில், வெறும் இரண்டு ஆட்டப் புள்ளிகளை மட்டுமே பெற்ற பெடரர், கோரிக்கிடம் ஹாலே ஓபன் பட்டத்தை பறி கொடுத்தார்.

இது 2வது பட்டம்

இது 2வது பட்டம்

போர்னா கோரிக், க்ரோஷியா நாட்டைச் சேர்ந்தவர். இருபத்தியொரு வயதான கோரிக் வெல்லும் இரண்டாவது பட்டம் இது தான். 98 பட்டம் வென்ற பெடரரை, வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார், இந்த இளம் வீரர். ஹாலே ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் க்ரோஷிய வீரராவார்.

பெடரர் கருத்து :

பெடரர் கருத்து :

ஆட்டத்திற்கு பின் பெடரர் கூறியபோது, ஸ்டுட்கார்ட் மற்றும் ஹாலேவில், ஆடியது சிறப்பாக அமைந்ததாகவும், நிச்சயமாக தான் தலை நிமிர்த்தி இங்கிருந்து செல்வேன். இந்த ஆண்டு இதுவரை சிறப்பாக உள்ளது, இது அடுத்து வரும் விம்பிள்டன் ஓபனிலும் தொடரும் என நம்புவதாகவும், தெரிவித்தார்.

 பறி போன சாதனை வாய்ப்புகள்

பறி போன சாதனை வாய்ப்புகள்

இந்த இறுதிப் போட்டியில் தோற்றதால், பல சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெடரர் இழந்துள்ளார். ஹாலே தொடரில் இதுவரை ஒன்பது பட்டங்களை வென்ற பெடரர், தற்போது பத்தாவது பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். மேலும், புல்வெளி அரங்கில் (GRASS COURT) தொடர்ந்து 20 ஆட்டங்கள் வென்று வந்த சாதனையும் தற்போது தடுக்கப்பட்டுள்ளது.

 99வது பட்ட வாய்ப்பும் போனது

99வது பட்ட வாய்ப்பும் போனது

ஹாலே ஓபன் பட்டத்தை வென்றிருந்தால், அது பெடரரின் 99வது பட்டமாக இருந்திருக்கும். மேலும், விம்பிள்டன் அவரது 100வது பட்டமாக அமைந்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். தற்போது, அந்த வாய்ப்பும் பறிபோயுள்ளது. பெடரரின் தோல்வியால், ரபேல் நடால் அடுத்து அறிவிக்கப்படும் டென்னிஸ் ரேங்க்கிங்கில் முதலிடம் பெறுவார்.

Story first published: Monday, June 25, 2018, 17:47 [IST]
Other articles published on Jun 25, 2018
English summary
Roger Federer fails at the Halle Open finals against Borna Coric. It's a shocking loss this season for Roger. He also losing the No.1 spot to Nadal after this loss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X