பிரியா விடை பெற்றார் ரோஜர் ஃபெடரர்.. கண்ணீர் விட்டு அழுத நடால்.. நெகிழ்ச்சியில் டென்னிஸ் ரசிகர்கள்

லண்டன் : சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் கண்ணீர் மல்க ரசிகர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றார்.

Recommended Video

Roger Federer-ன் Emotional Farewell! கண்ணீர் விட்ட Nadal

20 கிராம் ஸ்லாம் பட்டங்களை முதன்முறையாக வென்ற வீரர், விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்ற வீரர் போன்ற சாதனையை ரோஜர் ஃபெடரர் படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் 41 வயதான அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு லேவர்ஸ் கோப்பை தொடர் தான் தமது கடைசி போட்டி என்று அறிவித்தார்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

இதனால் லேவேர்ஸ் கோப்பை மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. இந்த நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் தனது நண்பரும் கடும் போட்டியாளருமான ரபேல் நடால் உடன் ரோஜர் பெடரர் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடினார். சோக் மற்றும் டியோபி ஜோடியை எதிர்கொண்டு முதல் செட்டை பெடரர், நடால் கூட்டணி வென்றது.

கதறி அழுதார்

கதறி அழுதார்

இருப்பினும் அடுத்த மூன்று செட்களிலும் இளம் ஜோடியான சோக் மற்றும் டியோபி வென்றது .இதனை அடுத்து ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க ரோஜர் பெடரர் விலகினார். பெடரர் விலகுவதை தாங்கிக்கொள்ள முடியாத ரஃபேல் நடாலும் அவருக்கு அருகில் அமர்ந்து கதறி அழுதார். இதை பார்த்த ரசிகர்கள் நெகழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ரோஜர் ஃபெடரரை ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்கள் தங்களது தோளில் சுமந்து மைதானத்தில் வலம் வந்தனர்.

மகிழ்ச்சியான நாள்

மகிழ்ச்சியான நாள்

ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த ரோஜர் ஃபெடரர், இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. நிச்சயம் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். சோகமாக இல்லை. உங்கள் முன் நிற்பதை பெருமையாக கருதுகிறேன். கடைசி போட்டியில் விளையாட முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். என்னுடைய டென்னிஸ் பயணம் மிக பிரமாதமான ஒன்று. இதை திருப்பி செய்யவும் நான் ஆசைப்படுகிறேன்.

 மனைவி நினைத்திருந்தால்..

மனைவி நினைத்திருந்தால்..

என் மனைவி , குழந்தைகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என் மனைவி எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார் . அவர் நினைத்திருந்தால் என்னை எப்போதோ டென்னிஸ் போட்டியில் இருந்து விளையாடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார் என்று பெடரர் கூறினார்.

ரோஜர் பெடரரின் சாதனைகள்

ரோஜர் பெடரரின் சாதனைகள்

கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 20 சாம்பியன் பட்டங்கள் , 103 ஏடிபி தொடரில் சாம்பியன் பட்டங்கள், 6 ஏ டி பி பைனல் பட்டம், ஒரு டேவிஸ்கோப்பை, நம்பர் ஒன் வீரராக 310 வாரம் , மாஸ்டர்ஸ் தொடர் பட்டத்தை 28 முறை வென்றது, 31 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடியது போன்ற பல உலக சாதனையை ரோஜர் பெடரர் படைத்திருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Roger federer lost in his farewell game - Rafael Nadal cried for federer பிரியா விடை பெற்றார் ரோஜர் ஃபெடரர்.. கண்ணீர் விட்டு அழுத நடால்.. நெகிழ்ச்சியில் டென்னிஸ் ரசிகர்கள்
Story first published: Saturday, September 24, 2022, 8:45 [IST]
Other articles published on Sep 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X