For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாலே ஓபன்... 10வது பட்டத்தை நோக்கி விரையும் பெடரர்

By Aravinthan R

ஹாலே, ஜெர்மனி: ரோஜர் பெடரர் தற்போது நடந்து வரும் ஹாலே ஓபன் தொடரில் அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார். இறுதியில் அவர் வென்றால் அவர் புதிய சாதனை படைப்பார்.

அரை இறுதி மட்டுமல்லாமல்இறுதிச்சுற்றையும் அவர் எளிதில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொடரை பெடரர் கைப்பற்றும் பட்சத்தில் இது ஹாலே ஓபன் தொடரில் அவரது, பத்தாவது பட்டமாகும்.

அது மட்டுமின்றி, இந்த தொடரில் மேலும் பல சாதனைகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலிறுதி ஆட்டம்

காலிறுதி ஆட்டம்

காலிறுதிச் சுற்றில் மாத்யுவ் எப்டனை, 7-6 (7-2), 7-5, என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் அரை இறுதிக்குத் தகுதி பெற்றார். இந்த போட்டியில் எப்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை டை-பிரேக்கர் வரை எடுத்துச் சென்று நழுவவிட்டார். இரண்டாவது செட்டில், ஆரம்பத்தில் 5-3 என முன்னிலையில் இருந்து, பின் பெடரரிடம் அந்த செட்டையும் இழந்தார். இரண்டு செட்களையும் கைப்பற்றி, பெடரர் வெற்றி பெற்றார். அடுத்து நடக்கும் அரை இறுதியில், டெனிஸ் குட்லாவுக்கு எதிராக விளையாட உள்ளார்.

சாதனை மன்னன் பெடரர்

சாதனை மன்னன் பெடரர்

சமீபத்தில், பெடரர் டென்னிஸ் ரேங்கிங்கில் முதலிடத்தை பிடித்தார். அதில் தொடங்கி, பெடரர் ஆடும் ஒவ்வொரு ஆட்டமும், அவரது ரெக்கார்ட் புத்தகத்தில் ஏதாவது ஒரு வகையில் ஏற்றப்படுகிறது. இந்த ஹாலே தொடரை வென்றால், இது பெடரர் வெல்லும் பத்தாவது ஹாலே ஓபன் தொடராகும்.

19வது கிராஸ் கோர்ட் வெற்றி

19வது கிராஸ் கோர்ட் வெற்றி

நடந்து முடிந்த காலிறுதிச்சுற்றில் வென்றதன் மூலம், புல்வெளி அரங்கில், தொடர்ந்து 19 ஆட்டங்கள் வென்று உள்ளார். இன்னும் மூன்று புல்வெளி அரங்க ஆட்டங்களை வெல்வதன் மூலம், 174 புல்வெளி அரங்க ஆட்டங்களை வென்ற ஜிம்மி கானரின் சாதனையை சமன் செய்வார். இதன் மூலம் டென்னிஸ் வரலாற்றில், அதிக புல்வெளி அரங்க ஆட்டங்களை வென்றவர் என்ற சாதனையை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

99வது ஆடவர் ஒற்றையர் பட்டம்

99வது ஆடவர் ஒற்றையர் பட்டம்

இந்த ஹாலே தொடரில் வென்று ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றும் பட்சத்தில், இது பெடரரின் 99வது ஒற்றையர் பட்டமாகும். இதற்கு, அடுத்து விம்பிள்டன் தொடரில் விளையாட உள்ள பெடரர், ஹாலே ஓபன் வெற்றிக்குப் பின், விம்பிள்டனை தனது நூறாவது பட்டமாகப் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Story first published: Saturday, June 23, 2018, 17:11 [IST]
Other articles published on Jun 23, 2018
English summary
Roger Federer rushing towards his 10th title in Halle Open. Federer's record book getting filled with every match he has been playing in Halle.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X