டென்னிசில் மீண்டும் களம் திரும்பும் சானியா மிர்சா.. வைரலாகும் பயிற்சி வீடியோ

ஹைதராபாத்:டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நீண்ட இடைவெளிக்கு பின் தான் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்திய நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா, டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளார். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின்பும், அவர் இந்தியாவிற்காக பல போட்டிகளில் களம் இறங்கி வந்தார். 2017 ம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் தொடரில், கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை பெங் சுவாய் உடன் களமிறங்கி தோல்வியுற்றார்.

தோனி... தோனி... பாகுபலி ஸ்டைலில் ரசிகர்கள் மாஸ்... இணையத்தில் வைரல் வீடியோ

காயத்தால் விலகல்

காயத்தால் விலகல்

தொடர்ந்து மூட்டு காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், அவரால் பங்கேற்கவில்லை. இந்நிலையில், 2018 ஏப்ரல் மாதம் தான் கருவுற்று இருப்பதாக அறிவித்தார்.

ஆண் குழந்தை பிறந்தது

ஆண் குழந்தை பிறந்தது

அதன்பின்னர் அக்டோபர் மாதம் ஒரு அழகான ஆண் குழந்தைக்கு அவர் தாயானார். இஷான் என்ற அந்த குழந்தையின் படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியது.

வீடியோ வெளியீடு

சானியா குழந்தை பெற்றெடுத்து 5 மாதங்கள் ஆன நிலையில், தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் டிராக் உடையில் மீண்டும் டென்னிஸ் பயிற்சி மேற்கொள்வது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். இதன்மூலம் தனது பிட்னஸை உலகுக்கு அவர் அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

வரும் 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக சானியா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்த சானியாவின் ரசிகர்கள், மீண்டும் அவரை எப்போது களத்தில் காணலாம் என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sania Mirza Finally Gets Back To Tennis Court After The Birth Of Her Son.
Story first published: Monday, March 11, 2019, 14:26 [IST]
Other articles published on Mar 11, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X