For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சானியாமிர்சாவுக்கு கேல்ரத்னா..17 வீரர்களுக்கு அர்ஜூனா விருது..மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி : விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது பெறுவோரின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மையில் வெளியான விருது பட்டியலில் இருந்து எந்த மாற்றமும் இன்றி அதே பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

sania

இதன்படி கேல் ரத்னா விருதை டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெறுகிறார். அண்மையில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்து வீராங்கனையான மார்டினா ஹி்ங்கிசுடன் ஜோடி சேர்ந்து சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இதை பாராட்டும் விதத்தில் அவரது பெயர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளார்.

அர்ஜூனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா,ஹாக்கி கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த், துப்பாக்கி சுடுதல் வீரர் ஜிது ராய் உள்பட 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய சானியா மிர்சா கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி இருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும், நாட்டு மக்கள் என் மீது வைத்துள்ள அன்பையும், மரியாதையையும் உணர்ந்து கொள்ள முடிவதாகவும் தெரிவித்தார். இந்த விருது தான் மேலும் வெற்றிகளை குவிக்க உந்துசக்தியாக இருக்கும் என்றும் சானியா கூறினார்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வருகிற 29-ந்தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.

Story first published: Friday, August 14, 2015, 22:43 [IST]
Other articles published on Aug 14, 2015
English summary
India's ace Tenis player Sania Miraza has been choosen to confer prestigious Rajiv Gandhi Khel Ratna, 17 sportsperson including Cricketer Rohit Sharma have also been sleacted to Arjuna Awards for 2015.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X