சானியா மேடம் நீங்க பேசாம காமெடி நடிகையாயிருக்கலாம்ல.. ஜஸ்ட் மிஸ்.. தெறிக்க விட்டிருக்கலாம்!

ஹைதராபாத்: சானியா மிர்ஸாவின் காமெடி சென்ஸ் சூப்பரானது.. அவரை நெருங்கிப் பார்த்தவர்களுக்கும், பழகியவர்களுக்கும்தான் அவரோட ஹியூமர் நன்றாக தெரியும். அவரது டிக்டாக் வீடியோவைப் பார்த்தாலே அது புரியும்.

சரியான ஹியூமர் சென்ஸ் சானியாவுக்கு. எதையுமே ஜாலியாக எடுத்துக் கொள்வார். அதை அழகான முறையில் வெளிப்படுத்துவார். லூஸ் டாக் விட மாட்டார். முகத்தை உர்ரென்றும் வைத்துக் கொள்ள மாட்டார். டென்ஷனாக இருந்தால் அதை வேறு மாதிரி பக்குவமாக வெளிப்படுத்துவார்.

அவரது காமெடியும், டிக்டாக் வீடியோக்களும் ரொம்ப பிரசித்தம். அவர் மட்டும் நடிகையாக வந்திருந்தால் காமெடியில் கலக்கியிருப்பார். அந்த அளவுக்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோக்கள் இவை.

டகால்டி வேலை பார்த்த இலங்கை வீரர்.. பொங்கி எழுந்த கங்குலி.. வார்னிங் கொடுத்த டிராவிட்.. பரபர சம்பவம்

வைரலான டிக்டாக் வீடியோ

வைரலான டிக்டாக் வீடியோ

தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதாலும் விளையாட்டுப் போட்டிகள் நடக்காமல் போய் விட்டதாலும் வீட்டோடு இருக்கிறார் சானியா மிர்ஸா. இதனால் அவ்வப்போது டிக்டாக் செய்து வீடியோக்களைப் போட்டு வருகிறார். அவை சிரிக்க வைக்கும் வகையில் உள்ளன. அந்த வகையில் தற்போது அவர் போட்டுள்ள ஒரு டிக்டாக் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சானியாவின் டிக்டாக்

சானியாவின் டிக்டாக்

காலையில் எழுந்திருப்பது போன்ற ஒரு கொடுமை வேறு இருக்கவே முடியாது. அப்படி கடுப்பாக இருக்கும். அவர்களுக்கு சானியா போட்டுள்ள இந்த லேட்டஸ்ட் டிக்டாக் வீடியோ ரொம்பவே பிடிக்கும். ஆமாங்க, காலையில் எழுந்திருக்கும் கொடுமையை வைத்துத்தான் டிக்டாக் பண்ணியுள்ளார் சானியா. பால்கனியில் காலை நேரத்தில் நின்றபடி காணப்படுகிறார் சானியா. அப்போது சாலையில் ஒருவர் ஓடுகிறார்.

அப்பாவித்தனமான கேள்வி

அப்பாவித்தனமான கேள்வி

இவர் ஏன் இப்படி ஓடுகிறார். யாராவது அவரைத் துரத்துகிறார்களா என்று கேட்கிறார். அதற்கு அசரீரி குரலாக, காலைல 7 மணியாச்சும்மா அவர் ஜாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார் என்று வருகிறது. இதைக் கேட்ட சானியா காலைல 7 மணிக்கா.. இவ்வளவு சீக்கிரமாவா எழுந்து ஓடுவாங்க என்று அப்பாவித்தனமாக கேட்கிறார். இந்த வீடியோவுக்கு பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

பலத்த வரவேற்பு

பலத்த வரவேற்பு

இதுவரை 34,000 வியூஸுக்கு மேல் இதற்குக் கிடைத்துள்ளது. பலரும் சூப்பர், வாவ், நைஸ் என்று கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர். இது மட்டுமல்ல ஏகப்பட்ட காமெடியான வீடியோக்களை இதற்கு முன்பும் கூட சானியா பகிர்ந்துள்ளார். அதேசமயம் கொரொனாவிடமிருந்து தப்ப வீட்டோடு இருங்கள் என்று கூறும் ஒரு விழிப்புணர்வு வீடியோவும் முன்பு அவர் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கூட லேட்டாகலை.. டக்குன்னு தமிழ் சினிமாவுக்கு வாங்க சானியா.. பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கு!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Tennis ace Sania Mirza's latest video has createds laughter waves
Story first published: Wednesday, May 13, 2020, 19:52 [IST]
Other articles published on May 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X