2 ஆண்டுகளுக்குப் பின் செம என்ட்ரி கொடுத்த சானியா மிர்சா.. இரட்டையர் பட்டம் வென்று அதிரடி!

ஹோபர்ட் : நீண்ட ஓய்வுக்குப் பின் தான் ஆடிய முதல் டென்னிஸ் தொடரான ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இரட்டையர் பட்டம் வென்றுள்ளார் இந்தியாவின் சானியா மிர்சா.

சானியா மிர்சா இரண்டு ஆண்டு ஓய்வுக்குப் பின் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்து ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்றார்.

இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நாடியா கிச்செநோக்-உடன் இணைந்து ஆடினார் சானியா. இந்த தொடரில் ஐந்தாம் இடத்தில் ஸீட் செய்யப்பட்ட சானியா - நாடியா ஜோடி, இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

இறுதிப் போட்டியில் சீன ஜோடியான ஷுவாய் ஸாங் - ஷுவாய் பெங்-ஐ சந்தித்தனர். அதில் 6 - 4, 6 - 4 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது சானியா - நாடியா ஜோடி.

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று தன் மறுவருகையை அசத்தலாக துவங்கி இருக்கிறார் சானியா மிர்சா.

அவர் பவுலிங் ரெக்கார்டை தொடக் கூட முடியாது.. மறைந்த பாபு நட்கர்னி பற்றி வெளியான ஆச்சரிய தகவல்!

கடந்த 2017இல் தன் சீன ஓபன் தொடரில் தான் சானியா மிர்சா கடைசியாக ஆடி இருந்தார். அதன் பின் காயம் காரணமாகவும், குழந்தைப் பேறு காரணமாகவும் டென்னிஸ் களத்தை விட்டு விலகி இருந்தார்.

தான் மீண்டும் டென்னிஸ் ஆட வருவேன் என உறுதியாக கூறி இருந்த சானியா, தீவிர பயிற்சி மேற்கொண்டு, தான் ஆடிய முதல் தொடரிலேயே பட்டம் வென்று அசத்தி இருக்கிறார். இனி தொடர்ந்து டென்னிஸ் தொடர்களில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sania Mirza won Hobart International doubles title on her comeback tournament after 2 yeard of gap.
Story first published: Saturday, January 18, 2020, 13:27 [IST]
Other articles published on Jan 18, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X